கொலை மிரட்டல் விடுக்கும் அதிமுக பிரமுகர்; ரியல் எஸ்டேட் நபர் புகார்

தொழில் மோசடியில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர், குடும்பத்தாருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக, காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபர் ஐ.ஜி.யிடம் புகார் …

சட்டமன்ற எதிர்கட்சி தலைவரான, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வட்டத்துக்கு நெருக்கமான நபர் என தெரிவித்து கொலை மிரட்டல் விடுப்பதாக போலீசில் புகார் 

கோவை போத்தனூர் பகுதியில் வசிப்பவர் அப்துல் ரகுமான். பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் தவிக்கும் இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர் . ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், கோவை ஐ.ஜி. அலுவலகத்தில் புகார் ஒன்றை தந்திருக்கின்றார். அதில், நான் தனியாகவும் கூட்டாகவும் சேர்ந்து காலி இடங்களை வீட்டு மனைகளாக பிரித்து வியாபாரம் செய்து வருகிறேன். இந்த நிலையிலெ, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓர்ஆட்டுகுப்பை கிராமத்தில், பூமி ஒன்றை வாங்கி அதனை, 2010 ஆம் ஆண்டு தனது தொழில் கூட்டாளியான, அதிமுக வட்டத்தைச் சார்ந்த அனுபவ் ரவி என்பவருக்கும், 

தனக்கும் கூட்டாக ஒரு கிரைய ஒப்பந்தமும், ராமசாமி என்பவர் கடந்த 2010 ஆம் ஆண்டு கிரைய முன்பணம் பெற்றுக்கொண்டு, எனக்கும் அனுபவி என்பவருக்கும் கூட்டாக கிரைய ஒப்பந்தம் எழுதிக் கொடுத்துள்ளார். கிரைய ஒப்பந்தங்களின் அடிப்படையில், எனக்கு 3.90 செண்டு சென்ற இடம் பாத்தியப்பட்டதாகும். இதனை என் ஆர் கார்டன் என பெயரிட்டு விற்பனை செய்து வரும் நிலையில், 

என்னுடன் இருந்த அனுபவ ரவி, கிரைய ஒப்பந்தத்தை மறைத்து, மோசடியாக 3.9 ஏக்கர் பூமியை அபகரிக்கும் நோக்கத்தில், பூமி தாரர்களிடமிருந்து, ஜென்ரல் பவர் ஆஃப் அட்டர்னி பெற்று, அதன் மூலம் என் ஆர் கார்டன் எனும் ஸ்கை சிட்டி வீட்டுமனைகளை, பல விற்கிரைய பத்திரங்கள் எழுதிக் கொடுத்து, மோசடியாக செயல்பட்டு வருகிறார். நான் அவருக்கு பல வேண்டுகோள் விடுத்தும், சட்டத்தை மதிக்காமல், விற்கிரைய பத்திரம் எழுதி கொடுத்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார். 

தற்போது அங்கு அனைத்து பிளாட்டுகளையும் விற்று விட்டார். எனக்கு சேர வேண்டிய பங்கு தொகையையும் கொடுக்கவில்லை. விற்ற சொத்தின் மூலமாக அனுபவ ரவி அவர்கள் 23 கோடி வரை லாபம் அடைந்திருக்கின்றார். சொத்தை முழுவதுமாக விற்று முடிந்த பின்பு, எனக்கு சேர வேண்டிய லாபத்தை ரூபாய் 5 கோடியை தருவதாக தெரிவித்தார். ஆனால் இதுவரை எனக்கு சேர வேண்டிய லாபத் தொகையை கொடுக்காமல், நம்பிக்கை மோசடி செய்து வருகிறார். 

இதை கேட்டால், அரசியல் செல்வாக்கு உள்ளதாகவும், உன்னை தீர்த்து கட்டி விடுவேன் என கொலை மிரட்டல் விடுக்கின்றார். அனுபவ ரவி கோவையில் அதிமுக முக்கிய புள்ளியாக இருந்து வருகிறார். அனுபவ ரவி எனக்கு கொடுக்க வேண்டிய ஐந்து கோடியை ஏமாற்றி, நம்பிக்கை மோசடி செய்ததோடு அல்லாமல், என்னையும் என் குடும்பத்தையும் உயிரோடு கொளுத்தி விடுவேன் என மிரட்டுகிறார். ஏதோ எனக்கு தொகையை முழுவதையும் கொடுத்து விட்டதாக, ஒரு போலி ஆவணம் 2014 ஆம் ஆண்டு தயார் செய்து, அதில் என்னுடைய கையெழுத்தை மோசடியாக கையொப்பம் இட்டு தயாரித்துள்ளார். 

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே இதே போல ஒரு போலியான தயார் செய்து, அதில் ஏதோ எனக்கு 17 லட்சம் கொடுத்து விட்டதாக பொய்யாக தெரிவித்து, போலியான ஆவணம் தயார் செய்துள்ளார். அனுபவ ரவி சட்டவிரோத செயல்களினால், எனக்கு இருதய கோளாறு ஏற்பட்டு, ஒரு கை மற்றும் ஒரு கால் செயலற்று, வாத நோயால் பாதிக்கப்பட்டு, தனித்து எந்தவித செயல்களும் செய்ய முடியாமல் மிகுந்த மன வேதனையோடும், மன உளைச்சலோடும் அனுதினமும் வாழ்ந்து வருகிறேன். அனுபவ் ரவி கொடநாடு கொலை வழக்கு சம்பந்தப்பட்ட வரவாகவும் இருக்கிறார். 

எனவே இதற்கு பயந்து நான் இத்தனை காலம் அமைதியாக இருந்தேன். அனுபவ ரவி அடாவடி செயல்களை குறிப்பிட்டு, 2013 ஆம் ஆண்டு செட்டிபாளையம் காவல் நிலையத்தில் பல புகார் கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்து, அதன் பேரில் அளிக்கப்பட்ட உத்தரவின்படி, அனுபவ ரவி பெயரில் புகார் பதியப்பட்டு, சி எஸ் ஆர் கொடுக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

கடந்த மாதமும் நான் மருத்துவமனைக்கு சென்று விட்டு, ராமநாதபுரம் வழியாக வந்து கொண்டிருந்த பொழுது, எனது பக்கவாட்டில் மற்றொரு காரில் வந்த அனுபவ் ரவி கண்ணாடியை திறந்து, என்னை பார்த்து டேய் உன்னால் ஒன்றும் செய்ய ** புடுங்க முடியாது,  கொடநாடு கேஸ்ல டிரைவரை முடிச்சு கட்டின மாதிரி, உன்னையும் காண பிணம் ஆக்கிருவன் என்று மிரட்டி சென்றார். ஆகவே என்னை நம்பிக்கை மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்துவரும் அனுபவரின் மீது தக்க நடவடிக்கை எடுத்து, 

தனக்கு சேர வேண்டிய ஐந்து கோடி ரூபாய் மீட்டு தரவும், என் உயிருக்கும் என் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு தருமாறும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன், என அதில் புகார் தாரர் மனுவிலெ குறிப்பிட்டு இருக்கின்றார். தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி வட்டத்துக்கு உட்பட்ட நபர் தான் என்றும், தெரிவித்து அனுபவ ரவி மிரட்டுவதாக அவர் தெரிவித்து இருக்கின்றார். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடியாலும் அனுபவ் ரவி செய்த மன அழுத்தத்தாலும், உடல் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்து இருக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *