எச்சரிக்கை: திருப்பதியில் மீண்டும் சிறுத்தை மற்றும் கரடிகளின் நடமாட்டம்

திருமலை நடைப்பாதையில்  மீண்டும் சிறுத்தை மற்றும் கரடிகளின் நடமாட்டம் கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் வெளியிட்ட வனத்துறை தொல்லை ஏற்பட்டுள்ளது

திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள சேஷாச்சல மலைத்தொடரில் பல அறிய வகை தாவரங்களுடன் விலங்குகள் உள்ளது. இந்த விலங்குகள் அவ்வப்போது பக்தர்கள் நடந்து செல்லும் மலைப்பாதை வழியாக சாலையை கடந்து செல்வது தொடர்ந்து இருந்து வருகிறது. 

அவ்வாறு வந்த சிறுத்தை நெல்லூரை சேர்ந்த ஒரு சிறுமியை தாக்கி கொன்ற நிலையில் கர்னூலை சேர்ந்த ஒரு சிறுவனை தாக்கி கவ்வி சென்று பின்னர் வனப்பகுதியில் விட்டு சென்றது. இந்த சம்பவத்திற்கு பிறகு குண்டு வைக்கப்பட்டு அடுத்தடுத்து 6 சிறுத்தைகள் பிடிக்கப்பட்டது. இதில் இரண்டு அடந்த வனப்பகுதியில் விடப்பட்ட நிலையில் ஒன்று விசாகப்பட்டினம், மற்ற மூன்று திருப்பதி உயிரியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது. 

அதன் பிறகும் வன விலங்குகள் நடமாட்டத்தை கண்காணிப்பு கேமிரா வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிறுத்தை மற்றும்  கரடி  நடமாட்டம் கேமிராவில் பதிவாகியுள்ளது டிசம்பரில் 13 மற்றும் 29 ம் தேதிகளில்  கேமராவில் பதிவான காட்சிகளை வனத்துறை வெளியிட்டுள்ளது.

எனவே நடைபாதையில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக செல்ல  வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு கையில் கைத்தடி வழங்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *