சொந்தமாக விமானம் இல்லாத நாடக்கிய பெருமை மோடியையே சேரும்; சு.வே கிண்டல்
மக்களுக்கு சொந்தமான ஏர் இந்தியாவை விற்றுவிட்டு, இந்திய மக்களுக்கு உரிய ஒரு விமானம் கூட பறக்காத இந்திய வான்பரப்பை உருவாக்கிய பெருமை மோடியையே சேரும். மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெ. மேலூரில் பேட்டி
மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட மூன்று பயணியர் நிழற்குடைகளை திறந்து வைத்த பின்னர் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இந்திய மக்களுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்றுவிட்டு இந்திய மக்களுக்கு உரிய ஒரு விமானம் கூட பறக்காத இந்திய வான் பரப்பை உருவாக்கிய பெருமை பாரதப் பிரதமர் மோடியையே சேரும் என காட்டமாக தெரிவித்தார்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருசு.வெங்கடேசன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.இதன் ஒரு பகுதியாக மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மலம்பட்டி பெருமாள் பட்டி மேலூர் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் புதிதாக பயணியர் நிழற்குடைகள் 15 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது.
இதனை இன்று திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த சு.வெ, அதனைத் தொடர்ந்து மேலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு நலத்திட்ட பணிகள் மேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் நடைபெற்று வருவதாகவும், அடுத்த சில நாட்களில் ரூபாய் ஐந்து கோடி மதிப்பீட்டில் கொட்டாம்பட்டி யில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் துவக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தவர்,
பாரத பிரதமர் நேற்று திருச்சியில் உரையாற்றிய போது தமிழகத்திற்கு தேவையான பேரிடர் நிதி குறித்து எந்தவித அறிவிப்பும் செய்யாமல் மிக சாமர்த்தியமாக தனது உரையை நிகழ்த்தி சென்றார் என்றும், இதுவரை 700 விமானங்கள் இயக்கப்பட்டு வருவதாகவும் இனிமேல் 2000 விமானங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் பேசியதாக தெரிவித்த சு.வெ, இந்திய வான்பரப்பில் இந்திய மக்களுக்கு சொந்தமான ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்றுவிட்டு மக்களுக்கு சொந்தமான ஒரு விமானம் கூட பறக்காத இந்திய வான்பரப்பை உருவாக்கிய பெருமை திரு.மோடியையே சேரும் என்று காட்டமாக தெரிவித்தார்.