மதுரையில் மல்டிலெவல் கார் பார்க்கிங், மாநாட்டு மையம் என ஸ்மார்டாக கலக்கும் ஸ்டாலின்

மதுரை தமுக்கம் மைதானத்தில் கட்டப்பட்ட மாநாட்டு மையம் மற்றும்  மீனாட்சி அம்மன் கோவில் அருகே பன்னெடுக்கு வாகன நிறுத்தத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர்,  சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்பு

மாநாட்டு மையம்: மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான தமுக்கம் மைதானத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 47.72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10,082 சதுர மீட்டர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் புதிய மதுரை மாநாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது 

இம்மையம் 3,500 நபர்கள் வரை சிரமமின்றி அமர்ந்து பங்கு கொள்ளும் வகையில் பிரம்மாண்ட நிகழ்ச்சி அரங்கும், 800 நபர்கள் அமர்ந்து உணவருந்து வகையில் உணவு கூடமும் அமைக்கப்பட்டுள்ளது

இம்மையத்தில் நடைபெறும் விழாக்கள் கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு நவீன நகரும் தடுப்பான்களை கொண்டு பல்வேறு அளவில் உள் அரங்கை தேவைக்கேற்ப மாற்றி அமைக்கும் வசதியும் உள்ளது

தரைத்தளத்தின் கீழ் உள்ள தளத்தில் சுமார் 2,500 நான்கு சக்கர வாகனங்கள் 215 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிட வசதி உள்ளது

பன்னெடுக்கு வாகன நிறுத்தம்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அருகே பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்திட ஏதுவாக மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 44.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னெடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது

இதில் தரைமட்டத்திற்கு கீழ் 2 தளங்கள் தரைமட்டத்திற்கு மேல் 2 தளங்கள் என மொத்தம் 69,575 சதுர மீட்டர் பரப்பளவில் 4 தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது தரை தளத்திற்கு கீழ் உள்ள இரண்டு தளங்களில் சுமார் 1,104 சக்கர வாகனங்கள் 1,400 இரு சக்கர வாகனங்கள் சிரமமின்றி நிறுத்தும் வகையில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது 

வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக தரைத்தளத்தில் தகவல் மையம் மற்றும் மதுரை மாநகரின் கலாச்சார பெருமைகளை பறைசாற்றும் வகையில் புராதன சின்னங்கள் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது

மாதாந்திர வாடகை அடிப்படையில் 128 கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது, மேலும் கண்காணிப்பு கேமராக்கள் போதிய மின் விளக்கு வசதிகள் குடிநீர் வசதி கழிப்பறை வசதிகள் தீ தடுப்பு பாதுகாப்பு வசதிகள் அவசர கால வெளியேறும் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *