ஓடிக்கொண்டே அப்துல் கலாம் படம் வரைந்து ஓவிய ஆசிரியர் அசத்தல்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த  சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர் பேட்டை சேர்ந்த செல்வம் அவர்கள் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள் முன்னிட்டும், கலாமின் கனவு காணுங்கள், மரம் வளர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு  போன்றவைகளை மாணவர்களிடத்திலும்  இளைஞர்களிடத்திலும் கொண்டு சேர்க்கும் விதமாகவும்   “ஓடிக்கொண்டே” அப்துல் கலாம் படத்தை வரைந்தார்.

மண்ணில் பிறந்த அனைவருமே மகான்களாக மறைவதில்லை, சாதாரண குடும்பத்தில் பிறந்த அனைவருமே சரித்திரம் படைத்ததில்லை. இந்தியாவின் கடை கோடியில் ராமேஸ்வரத்தில் மீனவ கிராமத்தில் பிறந்த அப்துல் கலாம் இந்தியாவின் உயரிய பதவியான இந்திய குடியரசு தலைவராக தன்னம்பிக்கையாலும், முயற்சியாலும் முன்னேறியவர். இந்த வகையில் இந்திய இளைஞர்களுக்கு அவர் வாழ்ந்துக்காட்டி, வழிகாட்டியாகவும் செயல் பட்டு எழுச்சி நாயகனாக மாறியுள்ளார்,

2002ம் ஆண்டு இந்தியாவின்  11வது குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் தேர்ந்தெடுக்கப்பட்டார், பொக்ரான் அணு ஆயுத சோதனையில் பங்களித்தார், பின்பு “அக்னி பிரித்வி ஆகாஸ்” எனப்படும் ஏவுகணை திட்டங்களில் முக்கிய பங்காற்றினார்.

இந்தியாவிற்கென செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவிய பெருமைக்குரியவர் கலாம் அவர்கள். “மக்களின் ஜனாதிபதி”இன்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவர்.

முன்னாள் குடியரசுத் தலைவர்  அப்துல் கலாம் நினைவு நாள் முன்னிட்டும், கலாமின் கனவு காணுங்கள், மரம் வளர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவைகளை மாணவர்களிடத்திலும், இளைஞர்களிடத்திலும்  கொண்டு  சேர்க்கும்  விதமாகவும்  பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் “ஓடிக்கொண்டே” அப்துல் கலாம் படத்தை வரைந்தார்.

இந்த ஓவியத்தை  பார்த்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இளைஞர்கள் ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *