மீன் பிடி படகு கவிழ்ந்து ஆறு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த பரிதாபம்…!

ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஏரியில்  இளைஞர்கள் சென்ற  மீன் பிடிக்கும் படகு கவிழ்ந்த விபத்தில் ஆறு பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு இரண்டு இளைஞர்களின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் நான்கு பேரின் சடலம்  தேடும் பணி தீவிரம் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில்  பொட்டலகுரு மண்டலம் தோடேரு பஞ்சாயத்து சாந்திநகர் ஏரியில் அதே பகுதியை சேர்ந்த 10 பேர்  மீன் பிடிக்கும் படகில்  வேடிக்கை பார்க்க ஏரியில் சென்றனர்.  ஆனால் திடீரென படகு கவிழ்ந்தது. இதில் 4 இளைஞர்கள் நீச்சல் செய்தபடி கரைக்கு வந்தனர்.    

6 பேர் ஏரியில் மூழ்கினர்.  கரை திரும்பிய இளைஞர்கள்  போலீசார் மற்றும் ஊர் பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் நீச்சல் வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் இரவு முதல் தீவிரமாக தேடிதல் பணியில் ஈடுப்பட்டனர். ஆனால் இருள் சூழ்ந்ததால் இளைஞர்களை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. 

இந்நிலையில் ஆந்திர மாநில வேளாண்மை துறை அமைச்சர் காக்கானி கோவர்தன் ரெட்டியின் சொந்த ஊரான தோடேரு கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் அதே ஊரின் ஏரியில் மூழ்கியது குறித்து தகவல் அறிந்த அமைச்சர்  கேரள மாநிலத்திற்கு அதிகாரபூர்வ பயணமாக சென்ற நிலையில் தனது பயணத்தை பாதியில் முடித்து கொண்டு இரவோடு இரவாக சொந்த ஊருக்கு வந்து மீட்பு பணியை துரிதப்படுத்தினார்.    

சம்பவ இடத்தை நெல்லூர்  எஸ்.பி. விஜயராவ் ஆய்வு செய்து நேரில் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். ஏரியில் காணாமல் போனவர்களில் பமுஜுலா பாலாஜி (21), பதி சுரேந்திரா (18), மண்ணூர் கல்யாண் (25), பட்டா ரகு (24), அல்லி ஸ்ரீநாத் (18), சல்லா பிரசாந்த் (28) ஆகியோர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இதுவரை கல்யாண், ஸ்ரீகாந்த் என்ற ஆகிய இரு இளைஞர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.  

மேலும் நான்கு இளைஞர்கள் சடலம் தேடும் பணி நடந்து வருகிறது.ஒரே கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் 6 பேர் இறந்த சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இளைஞர்கள் சென்ற படகு கிரேன் மூலம் வெளியே கொண்டு வந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *