டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 , 2ஏ தேர்வுகள் இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது.

தமிழக அரசுத் துறைகளில் உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு, கடந்த மே 21-ம் தேதி நடைபெற்றது.  அதன்படி முதல்நிலைத் தேர்வு எழுதியதில் 57,641 பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கான முதன்மைத் தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெறுகிறது. 

சென்னை உட்பட 20 மாவட்டங்களில் 186 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. காலையில் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வும், மதியம் பொதுத் தேர்வும் நடைபெறுகிறது.  முதன்மைத் தேர்வினை 27, 306 ஆண்களும், 27764 பெண் தேர்வர்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 55 ஆயிரத்து71 பேர் எழுத உள்ளனர். காலையில் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வும், மதியம் பொதுத் தேர்வும் நடைபெறுகிறது.

இதில் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்விற்கு தனியாக தரவரிசை பட்டியலும் நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கு தனியாக தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படும். அதன் அடிப்படையில் துறைவாரியாக காலி பணியிடங்களுக்கு தேர்வுபட்டவர்கள் ஒதுக்கீடு செய்யப்படுவார்கள். சென்னையில் மொத்தம் 32 மையங்களில் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *