சபாஷ்: தமிழ்நாட்டிலே முதல் முறையாக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பீஃப் உணவு…

தமிழ்நாட்டிலே முதல் முறையாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள உணவகத்தில் தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையம் உத்தரவின் படி மாட்டிறைச்சி  உணவை சேர்க்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் நடத்தும் மூன்று உணவகத்தில் தயிர் சாதம் சாம்பார் சாதம் கருவேப்பிலை சாதம் பிரிஞ்சி சாப்பாடு கேழ்வரகு களி  போன்ற சைவ உணவுகள் மட்டுமே நடத்தப்பட்டு வந்திருந்தது.

இதனால் இந்த உணவகத்தில் அசைவ உணவான மாட்டிறைச்சி உணவும் சேர்க்க வேண்டுமென திருவள்ளுர் மாவட்ட முன்னாள் ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர் மோகன் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார்.

அத்தகைய மனுவை மாவட்ட ஆட்சியர் நிராகரித்திருந்தார். அதை எதிர்த்து தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்திற்கு சென்ற மோகன் என்பவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் நடத்தும் உணவகத்தில் மாட்டு இறைச்சி போன்ற அசைவ உணவுகளும் சேர்க்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என  மனு அளித்திருந்தார்.

அவர் மனுவை ஏற்ற   தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மூன்று உணவகத்திலும் மாட்டிறைச்சி போன்ற அசைவ உணவுகள் சேர்க்க வேண்டுமென ஆட்சியருக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் 3 உணவகத்திலும் மாட்டிறைச்சி போன்ற அசைவ உணவுகளை சேர்க்க உத்தரவானது அளித்துள்ளார். அதன் அடிப்படையில் அசைவ உணவுக்கான விலைப்பட்டியல் உணவு விடுதி முன்பாக அச்சடிக்கப்பட்டு பேனர் வைக்கப்பட்டுள்ளது.

அதில் சிக்கன் பிரியாணி 100 ரூபாய் சிக்கன் குழம்பு 50 முட்டை 15 சிக்கன் 65 -60 மீன் குழம்பு -50 மீன் வருவல் – 30 

மட்டன் குழம்பு -100 ஆட்டுக்கால் சூப் -100 மட்டன் பிரியாணி -200 பீப் பிரியாணி -100 விலைப்பட்டியல் ஒட்டப்பட்டு இருப்பதால் விரைவில்   மாட்டு இறைச்சி உணவு சேர்க்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையம் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உணவகத்தில் மாட்டிறைச்சி உணவு சேர்க்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் இயங்கும் உணவகத்தில்  மாட்டிறைச்சி உணவு கொண்டு வர வேண்டுமெனவும் திருவள்ளூர் ஆதிதிராவிட முன்னால் நலக்குழு உறுப்பினர் மோகன் கோரிக்கை விடுத்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *