பட்ஜெட்: தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ₹7 லட்சமாக உயர்வு.

வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக அதிகரிப்பு ஆண்டிற்கு ஏழு லட்சம் வரை தனிநபர் வருமானம் பெறுவருக்கு இனி வருமான வரி இல்லை.

தனிநபர் வருமானம் 2 மடங்காக அதிகரித்து ₹1.97 லட்சமாக உயர்ந்துள்ளது. -பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு

தங்கம், வெள்ளி மற்றும் வைரம் மீதான சுங்கவரி உயர்த்தப்பட்டது; தங்கம், வெள்ளி மற்றும் வைரம் விலை உயர்கிறது.

சிகரெட்களுக்கான வரி மற்றும் புகையிலை பொருட்களும் விலை உயர்கிறது. 16 சதவீதம் வரை வரி உயர்வு செய்யப்படுகிறது: நிதியமைச்சர் அறிவிப்பு

செல்போன், டிவி விலை குறைகிறது

சைக்கிள், பொம்மைகளுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் வாகன பேட்டரிக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் – அயன் மூலப் பொருட்களுக்கு வரி கிடையாது.

சில மொபைல் உதிரி பாகங்களுக்கு இறக்குமதி செய்வதற்கான சுங்க வரி குறைக்கப்படும்.

டிவி பேனல்களுக்கான சுங்க வரி 2.5%ஆக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிவி, செல்போன், சைக்கிள் விலை குறையும்.

வருமான வரி விதிப்பு முறையில் என்ன மாற்றம்?

₹3 லட்சம் வரை – வரி இல்லை.

₹3 முதல் ₹6 லட்சம் வரை – 5% வரி

₹6 முதல் ₹9 லட்சம் வரை – 10% வரி

₹9 முதல் ₹12 லட்சம் வரை – 15% வரி

₹12 முதல் ₹15 லட்சம் வரை – 20% வரி

₹15 லட்சத்துக்கு மேல் – 30% வரி

இதனால் வருமான வரி குறைய வாய்ப்பு உண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *