புதிய வகை கொரோனா பிஎஃப் 7 அச்சம், பரிசோதனையை வேகப்படுத்த முதல்வர் கட்டளை

வெளி நாட்டிலிருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டு கண்காணிக்க தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடிக்கபட்டுள்ளது 

சென்னை தலைமைச் செயலகத்தில் புதிய வகை உருமாறிய கொரோனா பிஎஃப் 7 சீனாவில் அதிகளவில் பரவிய நிலையில், இந்தியாவிலும்  சிலருக்கு அந்த வகை கொரோனா வந்துள்ளதாள், தமிழ்நாட்டில் புதிய வகை கொரோனா பரவலை முன்கூட்டியே தடுப்பது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான  ஆலோசனை கூட்டம் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில்  மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன்,

தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை கூடுதல் செயலாளர் பணிந்திர ரெட்டி, செயலாளர் செந்தில்குமார், டிஜிபி சைலேந்திரபாபு, ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனை ஈடுபட்டனர். இந்த கூட்டத்தில் வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் சர்வதேச  பயணிகளை  பரிசோதனை மேற்கொண்டு கண்காணிக்க திட்டமிடபட்டுள்ளதாகவும்

மேலும் கொரோனா, காய்ச்சல், சளி, தொண்டை வலி, தொடர்பான அறிகுறிகள் இருந்தால் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சை வழங்கவும், சர்வதேச விமான நிலையங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி மருத்துவ குழுவினர் நிறுத்தபட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *