அரசு பள்ளியில் ஆயிரக்கணக்கில் படையெடுக்கும் மர அட்டைகளால் மாணவர்கள் அச்சம்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த  மங்களபுரம் ஊராட்சியில்  தாண்டாகவுண்டம் பாளையம் உள்ளது. இங்கு சுமார் 1000 த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு உள்ள  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி  சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் தொடர் மழை காரணமாக அருகில் உள்ள மலை பகுதியிலுள்ள மரங்களில் இருந்து மர அட்டைகள் எனப்படும் பூச்சிகள் ஆயிரக்கணக்கில் பள்ளி வளாகத்திற்கு உள்ளே நுழைந்துள்ளது.

தற்போது காலாண்டு விடுமுறை முடிந்து  பள்ளி திறக்கப்பட்ட உள்ளது.தொடர்ந்து கடந்த வாரம் பெய்த மழையால் மலைப்பகுதியில் இருந்து சாரை சாரையாக வந்த மர அட்டை பூச்சிகள் பள்ளி வகுப்பறை,கழிப்பறை, சமயலறை, மற்றும் பள்ளி வளாகம் என அனைத்து இடங்களிலும் கூட்டம் கூட்டமாக உள்ளது.இவைகள் அதிக துர்நாற்றத்துடனும் அருவறுக்கத்தக்க விதமாக உள்ளதை கண்டு பள்ளி மாணவ மாணவிகள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் அருகில் உள்ள வீடுகளிலும் இந்த மர அட்டைகள் அதிகமாக படையெடுத்துள்ளது. இவைகள் உணவு பொருட்களில் விழுந்து விடுவதால் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறும்போது:

கடந்த 5 நாட்களுக்கு மேலாக இப்பகுதியில் மர அட்டை பூச்சிகள் அதிக அளவில் தொல்லை கொடுத்து வருகிறது. முதலில் பள்ளி வளாகத்தில் இருந்த அட்டை பூச்சிகள் தற்போது எங்கள் வீட்டிற்கு வந்து விட்டது. மருந்து தெளித்தாலும் மீண்டும் மீண்டும் கூட்டம் கூட்டமாக வருகிறது.

 பள்ளி திறக்கப்படும் நிலையில் ஊராட்சி நிர்வாகம் தலையிட்டு மாணவ மாணவிகள் நலன் கருதி மர அட்டை பூச்சிகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *