முல்லைபெரியாறு அணைக்கு 128-ஆவது பிறந்தநாள் கொண்டாடிய விவசாயிகள்

தமிழகத்தில் முல்லைபெரியாறு பிறந்த 128 ஆண்டினை கொண்டாடிய முல்லைப்பெரியாறு விவசாயிகள். முல்லைப்பெரியாறு தண்ணீரில் மலர்  தூவியும், பொறியாளர் கர்ணல் ஜான் பென்னிகுயிக் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. 

பென்னிகுயிக் கனவுவான இராமநாதபுரம் கடைமடை வரை விவசாயம் செய்ய முல்லைப்பெரியாற்றில் 152 தண்ணீரை தேக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை. கடந்த 1850 முதல் தென் தமிழத்தின் இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டு மக்கள் வாழ்க்கை பெரும் கோள்வி குரியானது.

மக்களின் வாழ்வாரதத்தினை காக்கும் வகையில் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் வேண்டுகோளின் படி ஆங்கிலேய அரசான சென்னை இராஜதானி மற்றும் திருவாக்கூர் சமஸ்தானம் ஆகிய இரண்டும் ஒருங்கினைத்து திருவாங்கூர் சமஸ்தானத்தில் மேற்கு பகுதி தோன்றி கிழக்கு நோக்கி ஒடி அரபிக் கடலில் கலந்த முல்லை பெரியாற்றினை தடுத்து நிறுத்தி அணை கட்ட 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 

ஒப்பந்தத்தின் அடிப்படையில் பல இன்னல்களுக்கும், சிரமத்திற்கும், பல உயிர்கள் இழப்புகளுக்கு இடையே கடும் போராட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையினை கர்ணல் ஜான் பென்னிகுயிக் கட்டி முடித்தார். கட்டி முடிக்கப்பட்ட முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கடந்த 1895 ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி தமிழகத்தின் தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

அணை கட்டி முடிக்கப்பட்ட நிலையில் அணையில் 152 அடி தண்ணீர் தேக்கப்பட்டு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் திறப்பது மூலம் தென்தமிழக பகுதியான தேனி, திண்டுக்கல், மதுரை ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்களில் பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செழிப்படைந்தது.

நெல், கரும்பு, வாழை தென்னை போன்ற பலவகையான விவசாயங்களை விவசாயிகள் மேற்கொண்டனர். இதனால் தென்தமிழகத்தில் பசி பட்டினி நீங்கி மக்களும் கால்நடை ஜீவன்களும் உணவு மற்றும் குடிநீர் தட்டுபாடு இன்றி வாழ தொடங்கினர்.

தென் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய முல்லைப் பெரியாறு அணை தமிழகத்தில் பிறந்தநாள் இன்று. (அக்டோபர் 10) அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு 127 ஆண்டுகள் நிறைவடைந்து 128 வது ஆண்டு தொடக்கத்தினை முல்லைப் பெரியாறு அணையின் 128 வது பிறந்த நாளை தென் தமிழக விவசாயிகள் குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மிகவும் உணர்ச்சியுடன் மகிழ்சியுடனும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

லோயர்கேம் பகுதியில் முல்லைப் பெரியாறு அணை கட்டிய கர்ணல் ஜான் பென்னிகுயிக் மணிமண்டபத்தில் உள்ள ஜான் பென்னிகுயிக் திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழகத்தை நோக்கி பாய்ந்து வந்த முல்லைப் பெரியாற்றில் மலர்களை தூவி மரியாதை செலுத்தி முல்லை பெரியாற்று தண்ணீரை வரவேற்று அகமகிழ்ந்தனர்.

 ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக திலகம் முல்லைப் பெரியாறு அணையில் கர்ணல் ஜான் பென்னிகுயிக்கின் கனவு நிறைவேற ராமநாதபுரம் கடைமடை வரை தண்ணீர் சென்று விவசாயம் செழிக்க முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீரை தமிழக அரசு தேக்கிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *