‘கல்வியை இலவசமாக்கனும்’… தனியார் கல்லூரி உரிமையாளர்களுக்கு சவுக்கடி உத்தரவு பிறப்பித்த நீதிபதி!

Madurai High Court

உசிலம்பட்டியில்  உள்ள மூக்கையா தேவர் கல்லூரியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக தொடரப்பட்ட வழக்கு..

கல்வி பயிலும் மாணவர்கள் பேருந்து நிலையத்தில் காத்து கிடக்கும் சூழ்நிலையும் ,  கல்வி நிலையம் வைத்து நடத்தும் முதலாளிகள் BMW  காரிலும் பயணிப்பதுமே தற்போதைய சூழலாக உள்ளது  – நீதிபதி வேதனை கல்வி  அனைவருக்கும்  இலவசமாக வழங்கப்பட வேண்டும் உயர்நீதி மன்றம் மதுரை கிளை நீதிபதி மாகதேவன் கருத்து*

இந்த வழக்கு குறித்து தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க  உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்

 உசிலம்பட்டி பகுதியில் அமைந்துள்ள மூக்கையா தேவர் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக கல்லூரி முதல்வர் மற்றும் கள்ளர் கல்விக் கழக செயலாளர் வசூலித்து வருகின்றனர்.

கடந்த 2021 22 ஆம் ஆண்டு  மாவட்ட கல்லூரி இணை இயக்குனர் விசாரணை மேற்கொண்டு சட்டத்திற்கு புறம்பாக 2021 ஆண்டு 12லட்சத்து 83 ஆயிரம் கட்டணம் வசூலித்ததாக அறிக்கை அளிக்கப்பட்டு நடவடிக்கைகள் நிலுவையில் இருந்து வருகின்றன.. இதை எதிர்த்து  கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள்  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

எந்த விதமான நடவடிக்கையும் இல்லை எனவே தமிழக அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை பெற்று மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்ய நாராயண பிரசாத் அமர்வு அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மாணவரின் எந்தவிதமான பின்புலத்தையும் பார்க்காமல் மாணவரின் மதிப்பெண்களை மட்டுமே பார்த்து அவரின் முழு கல்விச்சலவையும் அரசாங்கமே வழங்குகின்றது

மேலும் கல்வி என்பது மாணவர்களுக்கு கட்டாயம் இலவசமாக வழங்கப்பட வேண்டும் சமூகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் பேருந்து நிலையத்தில் நிற்கும் சூழ்நிலையும்  கல்வி நிலையம் வைத்து நடத்தும் முதலாளிகள் பிஎம்டபிள்யூ காரிலும் பயணிப்பதுமே தற்போதைய சூழலாக உள்ளது என கருத்து தெரிவித்த நீதிபதிகள்

கல்லூரிகளில் மாணவர்களின் கல்வி கட்டணங்கள் தொடர்பாக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது குறித்து தமிழ்நாடு உயர் கல்வித் துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *