நீட் தேர்வில் குளறுபடி, ஓ.எம்.ஆர் விடைத்தாளை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

நீட் தேர்வு விடைத்தாளில் (OMR ) குளறுபடி நடந்துள்ளது உரிய விசாரணைக்கு உத்தரவிட கோரி மாணவன் வழக்கு *720 மதிப்பெண்களுக்கு 670 சரியான பதில் எழுதிய போதும் 115 மதிப்புகள் மட்டுமே கிடைக்க கூடிய OMR விடைத்தாளை தனது பெயரில் பதிவேற்றம் செய்துள்ளதாக வழக்கு தாக்கல்*

தான் எழுதிய அசல் OMR விடைத்தாள் மற்றும்  கார்பன் தாள் இரண்டையும்  தனக்கு வழங்க உத்தரையோட கோரி வழக்கு மாணவனின் அசல் OMR விடைத்தாள் மற்றும்  கார்பன் தாள் இரண்டையும்  நீட் தேர்வு முகமை செயளர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அதிரடி உத்தரவு

திருநெல்வேலியைச் சார்ந்த மாணவன் எவல்ட் டேவிட் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு. நான் 12 ஆம் வகுப்பு முடித்து  கடந்த ஜூலை 17 லில் நடைபெற்ற இளநிலை மருத்துவர் படிப்பிற்கான நுழைவு தேர்வு நீட் தேர்வில் பங்கு பெற்றேன் தேர்வை நல்ல முறையில் எழுதி இருந்தேன்.

இந்நிலையில் நீட் தேர்வு முகமை தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் கேள்விக்கான விடைகளை (answer key) வெளியிட்டது அதில்  எனக்கு 720 மதிப்பெண்களுக்கு 670 மதிப்பெண்கள் விடைகள் சரியாக இருந்தது.

இந்நிலையில் நீட் தேர்வு முகமை தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் பதில் எழுதிய OMR விடைத்தாள்  பக்கங்களை பதிவேற்றம் செய்துள்ளது அதை பார்த்த எனக்கு பயங்கர அதிர்ச்சியானது. அந்த OMR பதில் தாள் என்னுடையது அல்ல அதில் எனக்கு 115 மதிப்பெண்கள் மட்டுமே வரும் அந்த OMR விடை தாள் நான் எழுதியது இல்லை எனது விடைத்தாள் திருடப்பட்டு உள்ளது 

இதில் ஏதோ குளறுபடி நடந்துள்ளது எனவே எனது அசல்OMR விடைத்தாள் மற்றும் கார்பன் நகல் ஆகியவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் மேலும் எனது விடைத்தாள் மோசடி  குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் ,மருத்துவ கலந்தாய்வில் எனக்கான ஒரு இடம் ஒதுக்கீடு செய்து உறுதிப்படுத்த வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி பவானி சுப்பராயன் முன் விசாரணைக்கு வந்தது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜெய்மோகன் ஆஜராகி வாதாடினார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் மாணவர் எழுதிய நீட் தேர்வின் அசல் OMR விடைதாள் அதனுடைய கார்பன் விடைத்தாளையும் நீட் தேர்வு முகமையின் செயலாளர்  நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை  14ஆம் தேதி புதன் கிழமை  ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *