காட்சி ஊடகங்கள் சமூக பொறுப்புடன் செயல்பட  வேண்டும் – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

காட்சி ஊடகங்களில் நடக்கும் தொலைக்காட்சி விவாதங்கள் பலவும் அரைகுறை தகவல் உடையதாக, உள்நோக்கம் கொண்டதாக உள்ளது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசினார்.

அப்போது சமூக ஊடகங்களில் சில நேரங்களில் நீதிபதிகளுக்கு எதிரான பிரச்சாரங்கள் நடக்கிறது. நீதிபதிகள் ஒரு சம்பவம் குறித்து உடனடியாக எதிர்வினையாற்றாமல் இருக்கலாம். அவ்வாறு இருப்பதால் அவர்கள் பலம் இல்லாதவர்கள் என்று அர்த்தமில்லை என கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போது தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகள், சமூக ஊடக அலசல்கள் எல்லாம் கட்டப்பஞ்சாயத்து போல் நடக்கின்றன என விவதாக நிகழ்ச்சி குறித்து கண்டனம் தெரிவித்தார். தற்போது ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் ஜனநாயகத்தை பலவீனமாகிறது.

ஊடகங்களில் நடக்கும் தொலைக்காட்சி விவாதங்கள் பலவும் பக்க சார்புடையதாக, அரைகுறை தகவல் உடையதாக, ஏதேனும் உள்நோக்கம் கொண்டதாக இருக்கின்றன என்றார். இனி வரும் காலத்தில் காட்சி ஊடகங்களும், சமூக ஊடகங்களும் பொறுப்புடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *