அவதூறு பதிவு..!! அபராதம் கட்டும் கூகுள் நிறுவனம்..!! 

கூகுள் நிறுவனம் அவதூறு பதிவு வெளியிட்டதற்காக அந்நிறுவனத்திற்கு மெக்சிகோ நீதிமன்றம் ரூ.1,910 கோடி ரூபாய் அபராதம் விதித்து உள்ளது.  

மெக்சிகோவை சேர்ந்த வழக்கறிஞரும், எழுத்தாளருமான ரிச்டர் மொராலஸ் என்பவர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக கூகுள் நிறுவனம் கடந்த 2014-ம் ஆண்டு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது. 

இந்த பதிவு தன் பெயருக்கு களங்கம் விளைப்பதாக மொராலஸ் தெரிவித்திருந்தார். மேலும் இந்த பதிவை நீக்குமாறு கூகுள் நிறுவனத்திற்கு அவர் கோரிக்கை விடுத்தார். 

Google GDPR Violation France : Google hit with 44 Million Euro Fine -  விதிமுறைகளை மீறியதால் கூகுள் நிறுவனத்திற்கு வந்த சோதனை... ரூ.462 கோடி  அபராதம் விதித்த பிரான்ஸ் அரசு ...

ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்த விட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர் இது தொடர்பாக 2015-ம் ஆண்டு மெக்சிகோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரிச்டர் மொராலஸ் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய கூகுள் நிறுவனம் ரூ.1,910 கோடி அவருக்கு அபராதம் செலுத்த வேண்டும் என தீர்ப்பளித்தது. 

இதற்கு பதிலளித்த கூகுள் நிறுவனம் நாங்கள் வெளியிட்ட பதிவு கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் குறித்து மதிப்பிடும் என கூறியது. மேலும் இத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *