முதலமைச்சர் தொடங்கி வைத்த ” நடப்போம் நலம் பெறுவோம்” சுகாதார நடைபாதை திட்டம்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வித்துறை சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர்  இன்று  38 மாவட்டங்களில்” நடப்போம் நலம் பெறுவோம்” சுகாதார நடைபாதை திட்டம்  தொடங்கி வைத்ததை தொடர்ந்து,  கன்னியாகுமரியில் 4 அமைச்சர்கள் பங்கேற்று  நடைபயிற்சியில் ஈடுபட்டனர்.  

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் பொதுமக்களின் ஆரோக்கியம் பேணுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்டங்களில் அதிக மக்கள் வந்து செல்லும் பகுதிகளில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கான சுகாதார  நடைபாதை அமைத்து  நடப்போம் நலம் பெறுவோம்  என்னும் தலைப்பில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 

அதன்படி இன்று  முதலமைச்சர் ஸ்டாலின், 38 மாவட்டங்களில் இத்திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். கன்னியாகுமரியில் ஜீரோ பாயிண்ட் பகுதியில்  துவக்கப்பட்ட நிகழ்ச்சியில்,   கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன்,   பள்ளிக்கல்வி துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்,  ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகிய 4 அமைச்சர்களும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர்  மகேஷ், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பு நடப்போம் நலம் பெறுவோம் 8கிலோமீட்டர் நடைபாதை திட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் நடைப்பயிற்சியில் ஈடுபட்டனர்

நடப்போம்  நலம் பெறுவோம்  8 கிலோமீட்டர் தூர நடைபயணம்  தஞ்சையில்  சாரல் மழையிலும்,   அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் இருந்து துவங்கியது

மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கொடி யசைத்து துவக்கிவைத்தார் எஸ்.பி ஆஷிஷ் ராவத்,  சட்டமன்ற உறுப்பினர்கள்,  மேயர், துணை மேயர் உள்ளிட்ட ஏராளமானோர்  நடப்போர் நலம் பெருவோம் திட்டத்தில் பங்கேற்று 8 கிலோமீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொண்டனர்

ஓசூரில் 8 கி.மீ நடப்போம் நலம் பெறுவோம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது

தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் நடைபெறும் 8 கி.மீ  நடப்போம் நலம் பெறுவோம் நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழகம் முழுவதும் திட்டத்தை தொடங்கிவைத்தார், இதனை கானொலி காட்சி வாயிலாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி அவர்கள் தொடங்கி வைத்தார், அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாவட்ட ஆட்சியர் சரயு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார், நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ், மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா மற்றும் மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள், தொழிலாளர்கள் மாணவ மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்

நடைப்பயிற்சி அண்ணாமலை நகர் பகுதியில் இருந்து தொடங்கி சிப்காட் பகுதிகளில் டைட்டான் நிறுவனம் வழியாக வந்து நிறைவுபெற்றது,இறுதியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் நீர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது

செங்கல்பட்டில் சுகாதார நடைபாதை திட்டத்தை துவங்கி வைத்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் நடைபயிற்சி மேற்கொண்டார்

செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் என்னும் சுகாதார நடைபாதை திட்டத்தை குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார். 

தமிழகம் முழுவதும் சுகாதார நடைபாதை திட்டத்தினை 37 மாவட்டங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி வாயிலாக துவங்கி வைத்ததை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்திலும் இத்திட்டம் துவங்கப்பட்டது. 

இதில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி, சுகாதாரத்துறை துணை இயக்குநர் பரணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சுகாதாரத்துறை பணியாளர்கள் என ஏராளாமானோர் கலந்து கொண்டு பல்வேறு உடற்பயிற்சிகளை மேற்கொண்டனர். தொடர்ந்து அமைச்சர் அன்பரசன் கொடியை அசைத்த பின்னர் அமைச்சர் உட்பட அனைவரும் 1-கிலோ மீட்டர் தூரத்திற்கு சுகாதார நடைபாதையை துவங்கினர்.

விழுப்புரத்தில் நடப்போம் நலம் பெறுவோம் என்ற நடைபயிற்சி திட்டத்தினை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் கொடியசைத்து தொடங்கி வைத்தார் – இந்த நடை பயிற்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்:

நடப்போம் நலம் பெறுவோம் என்ற திட்டத்தினை சென்னையில் அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார் அதன் தொடர்ச்சியாக இந்த திட்டத்தினை விழுப்புரத்தில் சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து எட்டு கிலோமீட்டர் தூரம் அமைச்சர் செஞ்சி மஸ்தான். விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன். மாவட்ட ஆட்சியர் பழனி உள்ளிட்டோர் நடை பயிற்சி மேற்கொண்டனர். இந்த நடை பயிற்சியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அரசு ஊழியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள், நடைபயிற்சி சங்கத்தினர், பொதுமக்கள் என 500க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டு கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *