போராளி குயிலியின் 243ஆவது நினைவு நாள்; அரசியல் பிரமுகர்கள்  அஞ்சலி

18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிய பெண். சிவகங்கை அரண்மனையில் விஜயதசமி நாளில் உடலில் எண்ணெய் பூசி கொண்டு ஆயுதக் கிடங்கில் புகுந்து தன்னைத் தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலை படை தாக்குதல் நடத்தி ஆயுத கிடங்கை அழித்த வீர பெண் குயிலி சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதரை ஆங்கிலே அரசாகும் சுட்டுக்கொன்ற பின்பு 8 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வேலுநாச்சியாரை வேவு பார்த்த வெற்றிவேல் என்பவரை குத்தி கொலை செய்ததால் வேலுநாச்சியாரின் போர்படை தளபதியாக தலைமைபொறுப்பை ஏற்றுக்கொண்டவர். 

குயிலி  அவரது நினைவை போற்றும் விதமாக  சிவகங்கையில் வேலுநாச்சியார் நினைவிடத்தில் அமைந்துள்ள  குயிலியின் நினைவு ஸ்தூபி – க்கு அவரது 243வது நினைவு நாளை முன்னிட்டு சமுதாய மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள்  அஞ்சலி செலுத்தினர்.

இந்திய விடுதலை போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்து வெள்ளையர்களின் போர் தந்திரங்களை முறியடிக்க 1780ல் நவராத்திரி விழாவின் கடைசி நாளான விஜயதசமி தினத்தன்று, சிவகங்கை அரண்மனைக்குள் ஆங்கிலேயர்கள் குவித்து வைத்திருந்த ஆயுதக் கிடங்குக்குள் குயிலி தன் உடல் முழுவதும் எண்ணெய் தடவி தற்கொலைப்படையாக மாறி உடலில் தீ வைத்துக்கொண்டு குதித்து தன் உயிரை துறந்தார். இதனால் ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்கு முழுவதுமாக அழிக்கப்பட்டது. 

பின்னர் நடைபெற்ற போரில் ஆங்கிலேயரிடம் இருந்து வேலுநாச்சியாரால் சிவகங்கை சீமை மீட்க்கப்ட்டது என  வரலாற்று குறிப்பில் தெரிவிக்கப்படுகிறது  இந்நிலையில் குயிலியின் வீரத்தை போற்றும் விதமாக ஆண்டுதோறும் விஜயதசமி அன்று  அவரது நினைவு நாளில் சிவகங்கை பழமலைநகர் பகுதியில்  உள்ள வேலுநாச்சியார் நினைவு மண்டபத்தில் அமைந்திருக்கும் குயிலியின் நினைவு ஸ்தூபிக்கு திமுக, அதிமுக, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,ஐந்தினை மக்கள் கட்சி, மக்கள் தேசம் கட்சி ,விடுதலை சிறுத்தை கட்சி போன்ற பல்வேறு அரசியல் அமைப்பு தலைவர்களும் சமுதாய மக்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *