உலக தாய்பால் வாரம்: செவிலியர்கள் உற்சாக நடனமாடி விழிப்புணர்வு பேரணி

உலக தாய்பால் வாரம் செவிலியர்கள் உற்சாக நடனம் சினிமா பாட்டுக்கு நடனமாடி தாய்பால் அவசியம் குறித்த பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு 

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவையில் INNER WHEEL CLUB அவர்களது நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக இன்றைய தினம் தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். 

கோவை ESI மருத்துவமனையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கோவை IWC, கோவை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு IWC, கோவை சினெர்ஜியின் IWC உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொண்டு மருத்துவமனையில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவம், அதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

மேலும் இந்நிகழ்வில் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்தான பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் வழங்கினர். அதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான ஒரு கலந்து கொண்டு தாய்ப்பால் வாரம் குறித்தும் தாய்ப்பாலின் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணி மேற்கொண்டனர் 

இந்நிகழ்வில் மருத்துவமனை செவிலியர்கள் சினிமா பாடல்களுக்கு நடனமாடி உற்சாகப்படுத்தியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *