ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்பனை: மக்கள் அவதி!!

tomato

தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாகவும் கர்நாடக மாநிலத்தில் கொட்டித் தீர்த்து வரும் கனமழையாலும் காய்கறிகள் வரத்து குறைந்ததால் விலையானது கிடுகிடுவென அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் மதுரை பரவை காய்கறி மார்க்கெட், மாட்டுத்தாவணி சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் தினசரி 700 டன் காய்கறிகள் விற்பனைக்கு வரும் நிலையில் தற்போது 400 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது.

இதன் காரணமாக தக்காளி ரூ.40 ரூபாய்க்கும், மதியம் ரூ.40க்கு விற்பனையானது. அதுபோல் கேரட் கிலோ ரூ.100க்கு விற்பனையானது. மிளகாய் ரூ.90, மல்லி ரூ.100, இஞ்சி ரூ.80, பாகற்காய் ரூ.40 முதல் ரூ.50, வெண்டைக்காய் ரூ.30-க்கு விற்பனையாகிறது.

அதே போல் சீனியவரக்காய் ரூ.25 முதல் ரூ.30, அவரைக்காய் ரூ.60 முதல் ரூ.80, கத்திரிக்காய் ரூ.50 முதல் ரூ.60, பீர்க்காங்காய் ரூ.40 முதல் ரூ.50, பீன்ஸ் ரூ.100, முட்டைகோஸ் ரூ.30, உருளை ரூ.50, சேம்பு ரூ.40 விற்பனையாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *