தமிழக ஆளுநரை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்.!! பின்னணி என்ன..?

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் ஆளுநருடனான சந்திப்பில் அரசியல் பேசியதாக தெரிவித்தார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினி சந்தித்துப் பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஆளுநர் அலுவலகம் தரப்பில் தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நீடித்தது.

rajini rn ravi meeting, ஆளுநருடன் ரஜினி சந்திப்பு: பின்னணி என்ன? - what is  the reason behind rajinikanth tn governor rn ravi meeting - Samayam Tamil

ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பின்னர் போயஸ் கார்டனில் வைத்து நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்தித்ததாக தெரிவித்தார். மேலும் அரசியல் குறித்து பேசப்பட்டதா என்ற கேள்விக்கு, அரசியல் ரீதியாக பேசினோம், ஆனால் என்ன பேசினார் என்பது குறித்து சொல்ல மாட்டேன் என்றும், மீண்டும் அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்ததோடு, நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசவில்லை என்று கூறினார்.

JUST IN பால் தயிர் ஜிஎஸ்டி.. ஜெயிலர் சூட்டிங்.; ஆளுநரை சந்தித்த பின் ரஜினி  பேட்டி

மேலும், தமிழக மக்களின் கடின உழைப்பு, நேர்மை ஆகியவை மிகவும் பிடித்திருப்பதாக ஆளுநர் கூறியதாக தெரிவித்தார். ஆன்மீகம், கடவுள் நம்பிக்கை குறித்து பேசியதாகவும் கூறினார்.

ஜெயிலர் படிப்பிடிப்பு எப்போது என்ற கேள்விக்கு, வரும் 15ம் தேதி ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பால், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு அவர் கருத்து கூற விரும்பவில்லை என்று பதிலளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *