நாளை 6 மாவட்டங்களுக்கு கன மழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!!!

மேற்கு திசைக்காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, நாளை வட தமிழக மாவட்டங்கள்‌, திண்டுக்கல்‌, தேனி, தென்காசி, விருதுநகர்‌, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

நாளை மறுநாள் வட தமிழக மாவட்டங்கள்‌, திண்டுக்கல்‌, தேனி, தென்காசி, விருதுநகர்‌, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

வருகின்ற 11,12-ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள்‌, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 24 மணி நேரத்குற்கு வானம்‌ ஒரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌
இருக்கக்கூடும்‌.

அடுத்த 48 மணி நேரத்குற்கு வானம்‌ ஒரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌ என வானிலை மையம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *