சிதம்பரம் நடராஜர் கோயில்: ஆனி திருமஞ்சன தேரோட்டம் தொடங்கியது!!

Chariot

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழாவையொட்டி தேரோட்டம் தொடங்கி நடைப்பெற்று வருகிறது.

பூலோக கைலாயம் என்று அழைக்கப்படுவது சிதம்பரம் நடராஜர் கோவியில். உலக பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மற்றும் மார்கழி மாதங்களில் தரிசன மற்றும் தேரோட்ட விழா மிக சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாககொரோனா ஊரடங்கு காரணமாக ஆனி திருமஞ்சனத்திற்காக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது.

தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் தொடங்கியுள்ளது. ஆனி திருமஞ்சனத்தையொட்டி கடந்த மாதம் 27-ம் தேதி கொடியேற்றம் தொடங்கியது. அப்போது நடராஜர் கோயிலுக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் கோயிலின் கனக சபை தீட்சதர் கொடியேற்றத்துடன் தொடங்கி வைத்து கொடி மரத்திற்கு பூஜைகள் நடத்தி தொடங்கி வைத்தனர்.

இந்நிலையில் அன்று முதல் பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவாக நடைபெற்ற மந்தமாகவே இருந்தது. தற்போது நடராஜர், விநாயகர் போன்ற 5 சுவாமிகளின் தேரோட்டம் தற்போது தொடங்கியுள்ளது. இரண்டு ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெற நிலையில் தற்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழுத்து வருகின்றனர். மேலும், நாளை 6-ஆம் தேதி ஆனி திருமஞ்சன தரிசனம் நடைப்பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *