ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு தடை !

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு தமிழ்நாடு, கர்நாடக, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமாக சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு மழை பெய்துள்ளதால் தற்போது ஒகேனக்கல் அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்லுக்கு படையெடுத்து உள்ளனர். இதனிடையே ஐந்தருவி. மணல் மேடு, மாமரத்துன் கடவு மற்றும் தண்ணீர் தேக்கமடைந்துள்ள காலங்களில் சுற்றுலாப்பயணிகள் ஆயில் மசாஜ் செய்து அருவிகளில் குளிப்பது, பரிசல் சவாரி மற்றும் அருவின் அழகை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவார்கள்.

இந்த சூழலில் தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு ஒகேனக்கல் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் 10 கிலோ மீட்டர் முன்பே ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை தடுத்து நிறுத்தி போலீசார் திருப்பி அனுப்புகின்றனர்.

மேலும், பரிசலில் செல்லவும் அருவியில் குளிக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது இருப்பினும் ஒகேனக்கல் காவிரி ஆற்றை பார்க்கும் அனுமதி வழங்குங்கள் என்று சுற்றுலா பயணிகள் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அதோடு பேருந்தில் சென்று ஒகேனக்கல் ஆற்றை பார்க்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதால் பெண்கள், குழந்தைகள் அவதி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *