கமல், ரஜினி இருவரும்  எனது இரு கண்கள் – எஸ்.பி.முத்துராமன் சிறப்பு கட்டுரை

ரஜினியை வைத்து மட்டும் 25 படங்கள் இயக்கிய எஸ்.பி முத்துராமன் சினிமா துறையில் தனது தொழிலை எடிட்டிங்கில் பணியில் இருந்து தொடங்கியதாக நமது பாயும்  ஒளி சேனலுக்கு  ஒரு சிறப்பு காணொளி தொகுப்பு கொடுத்துள்ளார்.

ஒரேநாளில் ரஜினி - கமல் படங்கள்... இரண்டும் வெள்ளிவிழா வெற்றி!" - எஸ்.பி. முத்துராமன் ஷேரிங்ஸ் | S.P. Muthuraman Shares about rajni and kamal films

கமல், ரஜினி இருவரையும் தனது இரு கண்கள் என்று எஸ்.பி.முத்துராமன் ஒருமுறை கூறினார்.  கமல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான களத்தூர் கண்ணம்மா தான் எனக்கு முதல் படம். களத்தூர் கண்ணம்மாவில் தான் முதன் முதலில் உதவி இயக்குனராக பணியாற்றினேன் . கமலை தூக்கி கொஞ்சும் வாய்ப்பு எனக்கு இந்தப் படத்தில் கிடைத்தது.

பாலசந்தர் கூட ஒருமுறை சிவாஜிராவ் என்ற வைரத்தை கண்டு பிடித்தேன். ரஜினிகாந்த் என்று பெயர் வைத்து சினிமாவில் அறிமுகப்படுத்தினேன். என்னைவிட முத்துராமன் சார் தான் ரஜினிக்கு பலவிதமான கதாபாத்திரங்கள் தந்து அந்த வைரத்தை பட்டை தீட்டினார் என்று கூறியுள்ளார்.

ரஜினியை வைத்து கழுகு, நெற்றிக்கண், ராணுவ வீரன், போக்கிரி ராஜா, புதுக்கவிதை, அடுத்த வாரிசு, நான் மகான் அல்ல, நல்லவனுக்கு நல்லவன் என தொடர்ச்சியாக படங்கள் இயக்கினேன்.

முத்துராமன் இயக்கிய கமலின் சகலகலா வல்லவன் படம் இதுவரை தமிழில் வெளியான அனைத்து படங்களின் வசூல் சாதனையையும் உடைத்தது. 1989 வரை அந்த சாதனையை பிற படங்களைப் முறியடிக்க முடியவில்லை.

ஒரேநாளில் ரஜினி - கமல் படங்கள்... இரண்டும் வெள்ளிவிழா வெற்றி!" - எஸ்.பி. முத்துராமன் ஷேரிங்ஸ் | S.P. Muthuraman Shares about rajni and kamal films

எஸ்.பி.முத்துராமன் அதிக படங்கள் இயக்கியதற்கும், கமல், ரஜினி என்ற இரு பெரும் நடிகர்களுடன் தொடர்ச்சியாக படங்கள் செய்ததற்கும், நிறைய வெற்றிப் படங்கள் அளித்ததற்கு பல காரணங்கள் உண்டு. முதலாவதாக கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று போட்டுக் கொள்ள வேண்டும் என நான் ஒருபோதும் விரும்பியதில்லை என மனம் திறந்தார்.

எஸ்பி முத்துராமன் இல்ல திருமண விழாவில் கருணாநிதி, ரஜினி | Karunanidhi,  Rajini at SP Muthuraman grand-daughter marriage reception - Tamil Filmibeat

நெற்றிக்கண் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது ஒரு காட்சியில் மிக நீளமான வசனம் ரஜினிக்கு கொடுத்தேன் அதை பார்த்துவிட்டு ரஜினி என்னிடம் சொல்லாமல் படப்பிடிப்பு தளத்தை விட்டு சென்று விட்டார். என்ன நடந்து ஏன் என விசாரித்தபோது பின்னென்ன பாலசந்திரன் சார் ஒரு  முழு நீள படத்துக்கே எனக்கு இவ்வளவு பெரிய டயலாக் கொடுத்தது இல்லை  ஆனா நீங்க ஒரு சீனுக்கே இவ்வளவு பெரிய டயலாக் கொடுத்த எப்படி என புலம்பினார். இதுக்கு ஏன் நீ பீல் பண்ற இந்த டயலாக் நீ உன் ஸ்டைல் போசு என நான் கூறிய பிறகு தான் அவர் கொஞ்சம் சாந்தம் ஆனார் என நெற்றிக்கண் படத்தில் நடந்த சம்பவம் குறித்து விவரித்தார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *