எப்பொழுதுமே திமுக கூட்டணிதான்; இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பெருமை

திமுக கூட்டணியில்  என்றும், எப்பொழுதும் இருப்போம் என இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் இன்று இரவு பாபநாசம் அருகே பண்டாரவாடையில் செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்தார்.

திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் திராவிட மாடல் ஆட்சி தற்போது பின்பற்றப்படுகிறது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எப்பொழுதும் திமுக கூட்டணியில் இருக்கும் என்றும், தற்போது ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராக எங்கள் கட்சி உள்ளது. 

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் அதே தொகுதியை கேட்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூடுதலாக திருச்சி நாடாளுமன்ற தொகுதியும் கேட்கும் எண்ணம் உள்ளதாகவும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதியிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார் என்றும்,

அடுத்த மாதம் டெல்லியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழா மாநாடு நடைபெற உள்ளது என்றும் இதில் இந்திய கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் அழைக்கப்படுவர் என்றும் குறிப்பாக ராகுல் காந்தியும் திமுக தலைவர் ஸ்டாலினும் அழைக்கப்படுவார்கள் என்றும் காதர் மொகிதீன் மேலும் தெரிவித்தார்.

காதர் மொகிதீன் பண்டாரவாடை பள்ளிவாசலில் இருப்பது அறிந்து அங்கு மரியாதை நிமித்தமாக சந்திக்கச் சென்ற திருவருள் குடில் சுவாமிக்கு பள்ளிவாசல் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *