பாஜக-வை தோற்கடிக்க வேலை செய்யும் ஆளுநர் – எம்.பி. மாணிக்கம் தாகூர் கிண்டல்

தமிழக மக்களின் பாஜக  எதிர்ப்பை அதிகரிக்கும் சக்தியாக தமிழக ஆளு நர் செயல்படுகிறார்- சிவகாசியில் மாணிக்கம் தாகூர் எம். பி., பேட்டி !

சிவகாசியில்  பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு என்பது, ஆர் .எஸ் .எஸ் ஒப்புதலுடன், அரை மனதோடு மசோதா  சட்டமாகியுள்ளது. 

இந்த மசோதா சட்டம் காலம் கடந்த ,தேதி போடாத காசோலையாக தான் உள்ளது. இன்னும் 5 அல்லது 10 வருடங்கள் கழித்து தான் இதன் செயல்பாடுகள் வரலாம். பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து தெளிவுபடுத்த வேண்டிய காலகட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளார் .இந்த மசோதா சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற அனைத்து தரப்பினரும் ஆதரித்து வரும் நிலையில், 

சோனியா காந்தியின் பங்களிப்பு மிகப்பெரிய பங்களிப்பாக இருந்ததற்கு நன்றி தெரிவிக்கிறோம். எனவே இந்த சட்டத்தை உடனடியாக அமல்படுத்த பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு தொழிலுக்குண்டான வழக்கில் மீண்டும்  உச்ச நீதிமன்ற உத்தரவு என்பது ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

 பட்டாசு தொழில் பிரச்சனையில் ஒன்றிய அரசு தொல்லை கொடுத்து தொடர்ந்து வஞ்சிக்கிறது. சிவகாசிக்கு ஒன்றிய அரசு உதவி செய்யவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவினால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி, இந்தியாவின் அடையாளமான பட்டாசு தொழிலையும் மிகப்பெரிய அளவில் பாதிக்கும். காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட காவேரி ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு சட்ட விதிகளின்படி செயல்படுத்த வேண்டும். 

இப்பிரச்சனையில் பாஜகவின் தூண்டுதல் மற்றும் கர்நாடகா அரசியல் தலைவர்களின் பொய் பிரச்சாரம், துரோகத்தினால் தமிழக- கர்நாடகா நல்லுறவு பாதிக்கப்படுகிறது. காவிரி பிரச்சனையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டபூர்வமான முயற்சி எடுத்து வருகிறார். இப் பிரச்சனையில் பாஜக தொட்டிலையும் ஆட்டி, பிள்ளையையும் கிள்ளி விட்டு செயல்படும் பாஜக, கர்நாடகவையும், தமிழகத்தையும் பிரிக்க ரெட்டை வேடம் போடுகிறது. இந்தியா கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. 

அதிமுக- பாஜக கூட்டணியில் பிரிவென்றாலும் இன்னமும் அதிமுகவினர் மோடியை தான் மேடை ஏற்றி கொள்கையில் தெளிவின்றி குழப்பத்தில் உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை பிரச்சனையில் கூட்டணி முறிவு என்றாலும் தெளிவு பெற வேண்டிய நிலையில் உள்ளனர். இந்தியா கூட்டணி தெளிவாக ,வலுவாக உள்ளதால் 40க்கு 40 வெற்றி பெறும். காங்கிரஸ் தலைமை மிகவும் தெளிவாக உள்ளது. 

3 அணி அமைந்தால் நோட்டாவுக்கு  தான் ஜாதகமாக இருக்கும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியிலாவது அவர் வேட்பாளராக போட்டியிட தயாரா? என கேள்வி எழுப்பிய மாணிக்கம் தாகூர் அவர் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக முன்னணி தலைவர்களான வேட்பாளர்களை தோற்கடிக்க செய்யும் முயற்சியில் உள்ள அண்ணாமலை, சட்ட மன்ற தேர்தலை விட்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவாரா? என கேள்வி எழுப்பினார். 

29 ம் தேதி வெள்ளிக்கிழமை விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம்  மேற்கொள்ள உள்ள தமிழக ஆளுநர் ரவி யின் செயல்பாடு குறித்த கேள்விக்கு தமிழக மக்களின் பாஜக எதிர்ப்பை அதிகரிக்கும் மிகப்பெரிய சக்தியாக தமிழக ஆளுநர் ஆர். என். ரவி விளங்குகிறார். ஆளுநர் மத்திய அரசின் பிரச்சினை குறித்து மக்களிடையே பேசும் போது 

பட்டாசு தொழிலுக்கு உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள உத்தரவில், மத்திய அரசின் செயல்பாடு என்ன? என்பது வெட்ட வெளிச்சத்திற்கு வரும். தமிழக உயர்கல்வியில் ஆர்.எஸ்.எஸ் நபர்களை திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு கல்வித் துறையில் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை கண்டிக்கிறோம். என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *