ஈபிஎஸின் சொந்த தொகுதியில் அதிருப்தியான அதிமுகவினர்…

எடப்பாடி நகராட்சியின் 8வது வார்டு அதிமுக கவுன்சிலர் செல்வி சக்திவேல் அக்கட்சியிலிருந்து விலகி சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி.எம்.செல்வகணபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சியின் 8வது வார்டு அதிமுக கவுன்சிலர் செல்வி சக்திவேல் எடப்பாடி நகராட்சியின் நகர்மன்ற தலைவர் பாஷா இல்லத்தில் முன்னாள் அமைச்சரும், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான டி.எம்.செல்வகணபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

திமுகவில் இணைந்த அதிமுக கவுன்சிலர் செல்வி சக்திவேலுக்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி பொன்னாடை அணிவித்து வாழ்த்தி வரவேற்றார். அப்போது நகர்மன்ற தலைவர் பாஷா உள்ளிட்ட  திமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *