அமைச்சர் மதிவேந்தனுக்கு சப்போர்ட் செய்த அமைச்சர் காந்தி

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

வனத்துறை அமைச்சராக பதவியேற்று வெறும் 4 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் அந்த துறையை பற்றி மதிவேந்தன் எவ்வளவு தெளிவாக இருக்கிறார் என்று பாருங்க என, சக அமைச்சரான ராணிப்பேட்டை காந்தி பாராட்டு சர்டிஃபிகேட் கொடுத்திருக்கிறார்.10 வருடங்களாக எந்த கேள்வியும் கேட்காமல் விட்டுவிட்டு இப்போது கடந்த 2 ஆண்டுகளாக கேள்வி மேல் கேள்விகள் கேட்கிறீர்கள் என செய்தியாளர்களிடமும் தனது டென்ஷனை காட்டினார் அமைச்சர் காந்தி.உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் புழுதிவாக்கத்தில், சதுப்பு நில காடுகள் உருவாக்கும் முயற்சியாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் ராணிப்பேட்டை காந்தி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சட்டமன்ற உறுப்பினரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளருமான ஆவடி நாசர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதனிடையே வனத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம் செய்தியாளர்கள் தொடர்ந்து பல்வேறு கேள்விகள் எழுப்பிய நிலையில், எந்த கேள்வியையும் ஸ்கிப் செய்யாமல் ஒவ்வொரு கேள்விக்கும் உரிய பதிலை பொறுமையாக தந்து கொண்டிருந்தார்.ஒரு கட்டத்தில் செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துக் கொண்டு புறப்பட முயன்ற போது மீண்டும் ஒரு கேள்வி வந்தது. இதனால் டென்ஷனான அமைச்சர் காந்தி, எதையும் செய்யாமல் கம்முன்னு இருந்தால் எந்த கேள்வியும் கேட்க மாட்டீங்க, ஏதாவது நல்ல திட்டங்களை செய்தால் கேள்வி கேட்கிறீங்க என தனக்கே உரிய ஸ்லாங்கில் பேசினார். மேலும், வனத்துறை அமைச்சராக பதவியேற்று வெறும் 4 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் அந்த துறையை பற்றி மதிவேந்தன் எவ்வளவு தெளிவாக இருக்கிறார் என்று பாருங்க என அவருக்காக அமைச்சர் காந்தி சப்போர்ட் செய்தார். நீங்க கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் இவ்வலவு விளக்கமாக சொன்ன பிறகும் திரும்ப திரும்ப கேட்கக் கூடாது எனக் கோரினார்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/minister-ranipet-gandhi-gave-a-certificate-of-appreciation-to-minsiter-mathiventhan-515202.html?story=1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *