‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்…’ கட்சி தாவுபவர்களை பற்றி பாஜக துணை தலைவர் கருத்து

கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக அலுவலகத்தை நாளை தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திறந்து வைக்க உள்ள நிலையில் திறப்பு விழா குறித்து மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார்..

கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக அலுவலகத்தை நாளை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா., தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையிலும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையிலும் திறந்து வைக்கிறார். தொடர்ந்து 75 அடி உயர கொடி கம்பத்தில் பாஜக கொடியை நட்டா ஏற்றி வைக்கிறார் என்றார். தொடர்ந்து தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கட்டி முடிக்கப்பட்டு இருக்கக்கூடிய பாஜக அலுவலகத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஜெபி நட்டா திறந்து வைக்கிறார் அதன்படி தர்மபுரி நாமக்கல் திருச்சி விழுப்புரம் புதுக்கோட்டை தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் புதிய பாஜக அலுவலகம் திறக்கப்படுகிறது என தெரிவித்தார்.

 தொடர்ந்து பாஜக.,வில் இருந்து பலர் விலகி அதிமுக.,வில் சேர்வது குறித்த கேள்விக்கு பதில் அளித்த கே.பி.ராமலிங்கம், ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு செல்வது என்பது இயல்பான ஒன்று அதிமுகவில் இருந்து வந்த பலருக்கு பாஜகவில் மாவட்ட தலைவர் உள்ளிட்ட பொருப்புகள் வழங்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார். தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி வழங்க பாஜகவால் தான் முடியும், 8 ஆண்டுகளாக எந்த வித ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத பிரதமர் தலைமையிலான பாஜக தமிழகத்தில் நல்லாட்சியை வழங்கும். அதனால் தமிழகத்தில் பாஜக ஆட்சியை அமைப்பதற்க்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

தமிழக முதல்வரே தெரிவித்து உள்ளார் எங்கள் ஆட்சியை கலைப்பதற்கு சதி நடக்கிறது என்று ஆகவே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலுக்கும் தயாராகிவிட்டார் என்று தெரிகிறது. ஆக முதவரே ஈரோட்டில் மாபெரும் வெற்றியை பெற்றது போல அதிகமான வெற்றியை பெற பயன்படட்டும் என ராஜினாம செய்து விட்டு 2024 நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டால் அந்த தேர்தலிலேயே பாஜக ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சி அமைய வேண்டும் என்பது எங்களது இலக்கு, மேலும் எங்களது லட்சியம் திமுக அரசியல் அங்கத்தில் இருந்து தூக்கி எரியப்பட வேண்டும் அதற்கு  எது சரியாக அமையுமோ அதை பாஜக செய்யும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *