யாருக்குமே புரியாத சமஸ்கிருதத்துக்கு பல கோடி ஒதுக்கும் ஒன்றிய அரசு… அமைச்சர் எ.வ.வேலு சாடல்

யாருக்கும் தெரியாத சமஸ்கிருதத்திற்கு 700 கோடி நிதி ஒதுக்கும் ஒன்றிய அரசு தமிழ்மொழிக்கு 12 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கிறது மீண்டும் சமஸ்கிருதத்தை பரப்ப ஒன்றிய அரசு முயன்று வருவதாக அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு

தமிழக அரசின் 20 மாத கால ஆட்சியின் சாதனைகளை பாராட்டும் வகையிலும் பறைசாற்றும் வகையிலும் ஈரோடு மக்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மாபெரும் வெற்றி அளித்து உள்ளதாக கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் இல்ல திருமணவிழாவில் கலந்து கொண்ட அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாடூர் புறவழிச்சாலையில் உள்ள தனியார் மஹாலில் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன் இல்ல திருமண விழாவில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு திருமாங்கலயத்தை எடுத்துக்கொண்டு தமிழ் முறைப்படி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசுகையில் யாருக்கும் புரியாத சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்காக பல கோடி ரூபாயை ஒன்றிய அரசு ஒதுக்குகிறது. 

ஆனால் தமிழ்நாட்டிற்காகவும் தமிழ் வளர்ச்சிக்காக 12 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்படுகிறது என்றால் ஒன்றிய அரசின் நோக்கம் என்ன மீண்டும் சமஸ்கிருதத்தை பரப்ப வேண்டும் சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற நோக்கத்தில் ஒன்றிய அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது.சமஸ்கிருத வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்று வந்த திருமணங்களை தான் மாற்றி தமிழ் திருமணமாக திராவிட திருமணமாக நடத்திட மூம்மூர்த்திகள் போராடினார்கள் அவர்கள் தான் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா,முத்தமிழ் அறிஞர் கலைஞர் என பெருமித்துடன் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு ஈரோடு கிழக்கு தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி என்பது தமிழக அரசின் 20 மாத கால ஆட்சியை பறைசாற்றும் வகையிலும்,பாராட்டும் வகையில் வாக்காளர்கள் வாக்களித்து மாபெரும் வெற்றி அளித்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞரும், திராவிட முன்னேற்ற கழகமும் ஏற்கெனவே தேசிய அரசியலில் இருந்து வருவதாகவும் தற்போது தொடர்ந்து தமிழக முதல்வரும்,திராவிட முன்னேற்ற கழகமும் தேசிய அரசியலில் பயணித்து வருவதாகவும் இருந்தபோதிலும் தேர்தல் வரும் காரணத்தினால் அந்த மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் கருத்துக்களை ஆழமாக எடுத்துரைக்க வேண்டும் என்று தான் முதல்வர் அழைப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *