மக்கள் தீர்ப்பை  தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம்… பாஜக தலைவர் அண்ணாமலை 

ஈரோடு இடைத்தேர்தல் காங்கிரஸின் வெற்றி மக்கள் தீர்ப்பை  தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம் விழுப்புரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி விழுப்புரத்திற்கு கட்சி நிகழ்ச்சிக்கு வந்திருந்த பாஜக தலைவர் அண்ணாமலை இன்று கட்சியின் நிர்வாகி இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் 

அப்பொழுது கூறுகையில் ஈரோடு இடைத்தேர்தல் மக்கள் அளித்திருக்கக்கூடிய தீர்ப்பை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன் வெற்றி பெறக்கூடிய சூழ்நிலையில் உள்ள காங்கிரசைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

இடைத்தேர்தல் எங்களுக்கான தேர்தல் அல்ல 2024 நடைபெறும் பாராளுமன்றத் தேர்தல் எங்களுக்கான தேர்தல் என தெரிவித்தார் தேர்தலில் இரண்டு அணியா நிக்க வேண்டும் இருக்கக் கூடாது ஒரே அணியில் ஒரே சிம்பளலில் நிற்க வேண்டும்  வலிமையாக நிற்க வேண்டும் என்று கூறினோம். ஆளுங்கட்சி எதிர்க்க வேண்டுமென்றால் ஒரு பலமாக நிற்க வேண்டும் அதைத்தான் இந்த இடைத்தேர்தல் காட்டியுள்ளது என்று அதிமுக பிரிந்து உள்ளதை சூசகமாக கூறியுள்ளார்

மேலும் பேசிய அண்ணாமலை, சமையல் கேஸ் எரிவாயு விலை உயர்வுக்கு  உற்பத்தி இல்லாததே காரணம் 88 விழுக்காடு வெளியில் இருந்து வாங்க வேண்டி உள்ளது .ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இபிஎஸ், ஓபிஎஸ் இணைவது குறித்து கேட்ட கேள்விக்கு இதுகுறித்து அவர்கள் இருவர் தான் முடிவு எடுக்க வேண்டும் இதில் நான் தலையிட முடியாது என அண்ணாமலை தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *