இதுவே பாஜகவுக்கு கடைசி பட்ஜெட்… இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் விலாசல்

இந்திய கம்யூனிஸ்ட் மாநில தலைவர் முத்தரசன், கூட்டணி தர்மத்தை பாதுகாத்து இந்த தொகுதியை காங்கிரசுக்கு திமுக ஒதுக்கியது முதல் வெற்றி. காங்கிரஸ் கட்சி சிறந்த வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவனை அறிவித்தது இரண்டாவது வெற்றி. இந்த அணி சந்தர்பவாத அணி அல்ல தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட அணி அல்ல. காவிரி நதிநீர் பிரச்சனையில் தேர்தலுக்கு முன்பாகவே இணைந்து குரல் கொடுத்தோம்.  மக்கள் நலனுக்காக கொள்கை அடிப்படையில் உருவான அணி. இதனால் தான் இது வரை எந்த கட்சியும்இந்த அணியில்இருந்நு விலகவில்லை. 

எதிரில் உள்ள ஒரு அணியில் தலைமை தாங்குவதற்கே பிரச்சனை உள்ளது. தேசிய கட்சிதானே தலைவர் என சொல்கிறது. அதில் உள்ள கட்சி இரண்டாக மூன்றாக பிரிந்துள்ளது. இலையை இரண்டாக மூன்றாக பிய்த்து கொண்டுள்ளனர்.  ஒரு கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எதிர்தரப்பில் அணியே இல்லை. கொள்கை அடிப்படையில் அது உருவாகவில்லை. அது ஒரு சந்தர்ப்பவாத அணி.

சட்ட மன்றத்தில் சில பகுதிகளை விட்டு ஆளுனர் படித்தார். இதே எடப்பாடியாக இருந்தால் வளைந்து நெளிந்து அதை அப்படியே ஏற்றிருப்பார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் துணிவுடன் எழுந்து தனது கருத்தை பதிவு செய்தார். தமிழ்நாடு என சொல்ல மறுத்த ஆளுனரை சொல்ல வைக்கினார். தேநீர் விருந்துக்கு வருமாறு ஆளுனர் மண்டியிடுகிறார். ஆர்எஸ.எஸ் பிரதிநிதியாக அவர் இருக்கிறார். அது ஒரு பிற்போக்கு தனமான அமைப்பு. 

இன்றைய பட்ஜெட் பாஜக கடைசியாக சமர்பிக்கும் பட்ஜெட்டாக இருக்கும். இந்த நிதி நிலை அறிக்கையில் மக்களுக்கு அல்வா கொடுத்துள்ளனர்.  கர்நாடகாவிற்கு சிறப்பு நிதியாக 5 ஆயிரம் கோடி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால்  தமிழ் நாட்டிற்கு கொடுக்க வேண்டிய நிதி்யை கூட தரவில்லை

200 விவசாயிகள் டெல்லி போராட்ட களத்தில் பலியானார்கள். கடுமையாக போராடினார்கள்.  விலை நிர்ணயிக்கும் சட்டத்தை கொண்டு வருவோம் என்ற வாக்குறுதி அளித்தனர். ஆனால் அதை நிறைவேற்றவில்லை அதுகுறித்த எந்த தகவலும் இந்த பட்ஜெட்டில் இல்லை. மக்களஐ ஏமாற்றும் பட்ஜெட்டாக உள்ளது.  சர்வாதிகார பாசிச ஆட்சியை நடத்தி கொண்டிருக்கின்றனர்.

கிஞ்சித்தும் ஜனயாக நம்பிக்பை இல்லாத ஆட்சி இது.  2024ல் அப்புறபடுத்த  வேண்டும். இதன் தொடக்கமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் பெரியாரின்  பேரன் இளங்கோவனை வெற்றி பெற செய்ய வேண்டும். எதிர்த்து நிற்போரின் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *