முரசு இருக்கு… இரட்டை இலை எங்கே? தேமுதிக சுதீஷ் அதிரடி

ஜெயலலிதா அன்றைய தினம் முரசு சின்னம் அளிந்து போகும் என்று சொன்னார் ஆனால் தற்போது முரசு இருக்கு இரட்டை இலை இல்லை, தமிழ்நாட்டில் இரண்டே கட்சிதான் அது திமுக மற்றொன்று தேமுதிக… ஈரோடு கிழக்கு சட்டமன்ற த் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அறிமுக கூட்ட தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் பேச்சு

ஜெயலலிதா அன்றைய தினம் முரசு சின்னம் அளிந்து போகும் என்று சொன்னார் ஆனால் தற்போது முரசு இருக்கு இரட்டை இலை இல்லை, தமிழ்நாட்டில் இரண்டே கட்சிதான் அது திமுக மற்றொன்று தேமுதிக. 

அனைவரும் 2008 திருமங்கலம் பார்முலாவை திமுக ஆட்சியில் இருந்ததால் அது திமுகவுடையது என்று கூறுகின்றனர். ஆனால் திருமங்கலம் பார்முலா தேமுதிகவுடையது தான்.

2006ல்  செல்போன் வாட்ஸ் அப் இல்லா காலத்திலும் ஊடகம் துணையில்லாத போதும் முரசு சின்னம் பட்டித் தொட்டி‌ எங்கும் சென்றதால்  8.33 சதவீதம் பெற்றோம் அன்று நமக்கு அரசியல் தெரியவில்லை, பின்னர் 2009 நாடாளுமன்ற தேர்தலில் 10.33 சதவீதம் வாங்கினோம் அதன் பிறகு 2011ல் அதிமுகவோடு கூட்டணி வைத்து வெற்றி பெற்றோம் திமுக தோல்வியடைந்தது.

அதன் பிறகு வந்த தேர்தலில் தேமுதிகவுக்கு ஓட்டு வங்கி படிப்படியாக குறைந்து விட்டது. மீண்டும் பழைய 2006 நிலை வர வேண்டும் என்றால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பலத்தை நிரூபிக்க வேண்டும் அப்போது தான் 2024ல்  டெல்லியில் இருக்க கூடிய பாஜக, காங்கிரஸ் உள்ளிட்டோர் விஜயகாந்த் வீட்டின் கதவை தட்டுவார்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும், அதிமுக 4 பிரிந்துள்ளது. அவர்கள் நம்மை கிண்டல் செய்தார்கள். தற்போது பிரிந்துள்ளார்கள்…. ஈரோட்டில் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் பேச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *