பேரூராட்சி அலுவலகத்தில் மோடி படமா? முடியாது… திமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே அடிதடி

போடி -அருகே சின்னமனூரில் ஓடைப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் மன்ற வளாகத்தில் இந்திய பிரதமர்  நரேந்திர மோடியின்படத்தினை வைக்க வேண்டும் என பிஜேபி கோரிக்கை வைத்தனர் இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பின் இடையே பிரச்சனை ஏற்பட்டன

சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் அமைந்துள்ள ஓடப்பட்டி பேரூராட்சி ஆகும் இப்பேரூராட்சி அலுவலகத்தில் கூட்டம் நடத்தும் கட்டிடத்தில் தமிழக முதல்வரின் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தன இந்நிலையில் சின்னமனூர் நகர் மற்றும் ஒன்றிய BJPநிர்வாகிகள் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் பாரதப் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர் 

கோரிக்கையை ஏற்க மறுத்த பேரூராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தி வந்தன இதனை கண்டித்து இன்று ஓடைப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பிஜேபினருக்கும் -திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டனசம்பவம் அறிந்த சின்னமனூர் காவல்துறையினர் இருதரபடினரையும்அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய பின்

பிஜேபினர் தாங்களை சொந்த செலவில் புகைப்படம் தருவதாக கூறி கூட்டம் நடத்தும் கட்டிடத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்க வேண்டும் எனக் கூறி பிரதமர் புகைப்படத்தையும் செயல் அலுவலர் வழங்கினர் வரும் திங்கட்கிழமை நடைபெறும் பேரூராட்சி கூட்டத்தில் புகைப்படம் மாட்டுவதாக கூறி பெற்றுக் கொண்டனர் பின்னர் கலைந்து சென்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *