16 கோடி பேருக்கு வேலை! ஆனால் 16 ஆயிரத்தைகூட தாண்டாத பிரதமரின் தேர்தல் வாக்குறுதி

மக்கள் மீது அக்கறை இல்லாத பிரதமராக மோடி இருக்கிறார். விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி, மத்திய அரசு தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை மக்கள் பிரச்சினைகள் மீது அக்கறை இல்லாத பிரதமராக மோடி இருக்கிறார் என்று விருதுநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார் 

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகாவில் தாமரைக்குளம் பகுதியில்  100 ஏக்கரில் 200 கோடியில் மத்திய அரசின் ஜவுளித் துறை சார்பில், ஜவுளி பதனிடும் குழுமம் மற்றும் தொழில் பூங்கா அமைய உள்ளது. ஜவுளிப் பூங்கா என்ற பெயரில் விவசாய நிலத்தையும், சுற்றுச் சூழலையும் பாதிக்கும் சாயப்பட்டறை தொழிற்சாலை அமைக்கும் முயற்சிப்பதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும், சாத்தூர் ஜவுளிப் பூங்காவிற்கு நிதி  தாமதமின்றி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

விருதுநகர் மாவட்டத்தில் விவசாயம், தீப்பெட்டி, பட்டாசு ஆலை, அச்சு, கைத்தறி, விசைத்தறி, பேண்டேஜ், பஞ்சாலைத் தொழில்களை பாதுகாத்திட வேண்டும்..! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாதயாத்திரை இயக்கம் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டம் தாமரைக்குளத்தில் கடந்த அக்டோபர் 7ம் தேதி துவங்கியது. 

இக்கட்சியின்  மாநிலக்குழு உறுப்பினர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த பாதயாத்திரை இயக்கம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று முடிவு பெற்றது. பின்னர் இக் கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பின் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் திரு.முத்தரசன் விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் கூறியதாவது :

ஒன்றிய அரசு தேர்தல் வாக்குறுதிகளை எதுவும் நிறைவேற்றவில்லை ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தரப்படும் என கூறினார்கள் தற்போது எட்டு வருடங்கள் ஆகிவிட்டது தற்போது 16 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும் 16 ஆயிரம் பேருக்கு கூட வேலை வாய்ப்பு வழங்கவில்லை ஒன்றிய அரசு கார்ப்பரேட் முதலாளிகளை வளமாக்குகிறது வழங்குகிறது அதற்கு சாதகமாக இருக்கிறது.

அரசின் சார்பில் பொதுத்துறை நிறுவனங்கள் இதுவரை எதுவும் தோன்றவில்லை மோடி வருவதற்கு முன் வரை இருந்த நேரு காலத்திலிருந்து மோடி ஆட்சிக்கு முன்பு வரை இருந்த பிரதமர்கள் அவரவர் ஆட்சிக் காலத்திற்கு ஏற்றார்போல் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினர். லால்பகதூர் சாஸ்திரி இருந்த மூன்று ஆண்டு காலத்திற்குள் மூன்று பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார்.  

ஆனால் இந்த மோடி அரசு பொதுத்துறை நிறுவனங்களை எதுவும் உருவாக்கவும் இல்லை இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்று வருகிறார்கள் மொத்தத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்த மோடி அரசு எடுத்து வருகிறது. மக்கள் பிரச்சினைகள் மீது அக்கறை இல்லாத பிரதமராக இருக்கிறார்.

ஒன்றிய அரசினை குற்றம் சாட்டுகிறீர்கள் மாநில அரசு தொழில்துறை மற்றும் வேலை வாய்ப்பை பெருக்க என்ன செய்கிறது என்ற கேள்விக்கு?

ஒன்றே கால் வருட திமுக ஆட்சியில் அதிக அளவில் தொழில் வளத்தை ஏற்படுத்த மாநில அரசும் முதல்வரும் கடுமையாக முயற்சித்து வருகின்றனர். தொழில் வளத்தை பெருக்குவதற்காக தொழில் துறை அமைச்சரும் முதலமைச்சரும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தொழில் வளத்தை மேம்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய அரசு அறிவிப்போடு எல்லாத் திட்டங்களையும் நிறுத்தி விடுகிறது குறிப்பாக எய்ம்ஸ் மருத்துவமனை போல் எந்த திட்டமாக இருந்தாலும் சுற்றுச்சுவர் எழுப்புவதோடு மத்திய அரசு நின்றுவிடுகிறது திட்டத்தை முழுவதுமாக செயல்படுத்த வேண்டும் சர்க்கரை என்று எழுதினால் மட்டும் போதாது சர்க்கரையை கொடுக்க வேண்டும்.

எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி திமுக எம்பிக்கள் கடந்த ஐந்து வருடமாக பாராளுமன்றத்தில் எதுவும் பேசவில்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளது குறித்த‌ கேள்விக்கு?

முதலில் அவர் அவரைப் பார்த்துக் கொள்ள வேண்டும் அவர் பதவியை பார்த்துக் கொள்ளட்டும் பின்பு மற்றதை பேசவேண்டும் பாராளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் பேசுவதற்கு வாய்ப்பு தருவதில்லை அதுவும் இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை  திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர் ஒருவேளை அதிமுக எம்பிக்கள் பேசாமல்   இருந்திருக்கலாம் அதற்கு நான் பொறுப்பல்ல  இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *