விஜயபாஸ்கருக்கு சுத்துபோடும் லஞ்ச ஒழிப்புத் துறை.. அவரது நண்பர் வீட்டிலும் சோதனை

மதுரையில் சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பருக்கு சொந்தமான வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை.

கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக சி.விஜயபாஸ்கர் பொறுப்பு வகித்த போது, திருவள்ளூரில் உள்ள வேல்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய மருத்துவமனை துவங்க தகுதியானது என சான்றிதழ் வழங்கி உள்ளார்.

இது தொடர்பான ஆவணங்களை கைப்பற்ற சென்னை, சேலம், மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.

மதுரையில் அவரது நண்பர் மருத்துவர் பாலாஜி என்பவருக்கு சொந்தமாக புதூர் – ஜவகர்புரம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. இவர் சேலம் அரசு மருத்துவமனை டீனாக பணியாற்றியவர். தற்பொழுது தேனி அரசு மருத்துவமனை டீனாக பணியாற்றி வருகிறார். 3 ஆய்வாளர்கள் தலைமையில் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *