தேனியில் டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வரவேற்பு!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் தினந்தோறும் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய தினத்தில் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரனுக்கு தேனி சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது ஓபிஎஸ் தீவிர ஆதரவாளரும் முன்னாள் அதிமுக எம்பியுமான சையதுகான் தலைமிஅயில் டிடிவி தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

குறிப்பாக ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினரிடம் தற்போது நிலவிவரும் மோதலானது உச்சக்கட்டம் அடைந்திருக்கும் நிலையில் தற்போது இத்தகைய சந்திப்பானது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே அதிமுகவில் டிடிவி தினகரன், சசிகலா வந்தால் ஏற்றுக்கொள்வோம் என கடந்த சில தினங்களுக்கு சையதுகான் தெரிவித்திருந்தார். தற்போது சையதுகான் தலைமையிலான தொண்டர்கள் டிடிவி தினகரனுக்கு வரவேற்பு அளித்திருப்பது அதிமுக வட்டாரங்களில் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *