குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு பெருகும் ஆதரவு..!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு வுக்கு ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்  ஆதரவு தெரிவித்தார்.

இதுகுறித்து ஆந்திரப் பிரதேச மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘எஸ்சி, எஸ்டி, பிசி மற்றும் சிறுபான்மையினர் சமூகத்தினருக்கு ஜெகன் மோகன் ரெட்டி தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக இந்த சமூகத்தினரின் வளர்ச்சிக்கு ஜெகன் மோகன் ரெட்டி அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். 

குடியரசு தலைவர் தேர்தலில் திரௌபதி முர்முக்கு ஆந்திர முதல்வர் ஜகன் மோகன்  ரெட்டி ஆதரவு!

மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதால் தேர்தலில் இன்று நடைபெற உள்ள வேட்பு மனு தாக்கலில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பங்கேற்கவில்லை. பதிலாக, மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் கட்சியின் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரிவு தலைவர்களான விஜய் சாய் ரெட்டி மற்றும் மக்களவை உறுப்பினர் மிதுன் ரெட்டி ஆகியோர் வேட்பு மனுத் தாக்கல் நிகழ்வில் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

முர்மு டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா , பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து பேசினார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளதால் திரௌபதி முர்முவின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகி விடும் என கூறப்படுகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலில்.. செம ட்விஸ்ட்.. பாஜக வேட்பாளருக்கு ஜெகன் மோகன்  ஆதரவு.. பரபர அறிவிப்பு | Andhra Pradesh CM Jagan Mohan Reddy Supports BJP  Candidate Draupathi ...

ஒடிசா மாநிலத்தில் பழங்குடியின குடும்பத்தில் பிறந்தவர் தான் திரௌபதி முர்மு. ஒடிசாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் வேட்பாளர் முர்மு. ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் இவரே ஆகும். குடியரசுத் தலைவராக முர்மு தேர்வு செய்யப்பட்டால், இவர் நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *