மத்திய அரசு காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும்; வருமான வரி ஊழியர் சம்மேளனம் 

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அரசு பணியிடங்களில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும்  வருமான வரித்துறை பணியிடங்களை பிராந்திய அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் வருகிற ஜனவரி 5, 6 தேதிகளில் மாநில பிரதிநிதிகள் மாநாடு நடைபெற உள்ளதாக வருமான வரி ஊழியர் சம்மேளன அகில இந்திய தலைவர் எம்எஸ் வெங்கடேசன் பேட்டி; 

தூத்துக்குடியில் வருமான வரி ஊழியர் சம்மேளன ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டம் அகில இந்திய தலைவர் எம் எஸ் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. 

 இந்த கூட்டத்திற்கு பின்னர் அகில இந்திய தலைவர் எம் எஸ் வெங்கடேசன் செய்தியாளர்களிடம் பேசும்போது  வருமான வரி ஊழியர் சம்மேளன 14 வது மாநில பிரதிநிதிகள் மாநாடு மற்றும் பேரணி வருகிற ஜனவரி 5 மற்றும் 6 தேதிகளில் தூத்துக்குடியில் வைத்து நடைபெற உள்ளது இதில் மாநிலம் முழுவதும் இருந்து வருமான வரி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். 

இந்த மாநாடு மத்திய மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் மேலும் மத்திய அரசு வருமானவரித்துறை உள்ள அரசு பணியிடங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்  தற்போது தமிழகத்தில் வருமான வரித்துறையில் 800 பேர் பனிநியமனம் செய்யப்பட்டதில் 150 பேர் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர்  

இதை தவிர்க்கும் வகையில் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் பிராந்திய அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் மத்திய அரசு மத்திய அரசு ஊழியர்களுக்கான எட்டாவது ஊதியக்குழு அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும்  பணியில் இருக்கும் போது பலியான வருமான வரித்துறை ஊழியர்கள் மற்றும் கொரோனாவில் பலியான ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெற உள்ளதாக தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *