பொது சிவில் சட்டம்  மிக அவசியமானது .. புதுச்சேரி துணை நிலை ஆளுநர்.

Puducherry

திருநெல்வேலி மாவட்டத்தில் கோவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த அவர்,நெல்லை விருத்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், நாட்டில்  அனைவருக்கும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காக தான் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படுகிறது என்றார்.

ஆனால் இச்சட்டம் மதத்திற்கு எதிரானது என்ற தோற்றத்தை ஏற்படுத்த சிலர் நினைப்பதாகவும், இன்றைய சூழலில் பொது சிவில் சட்டம் அவசியமானது என்றும் குறிப்பிட்டார். அதேவேளையில் எதிர் கட்சிகள் கூட பொதுசிவில் சட்டத்தை ஆதரிக்க தொடங்கியிருப்பதாக தெரிவித்தார்.

காவிரி நதிநீர் பங்கீட்டில் புதுவைக்கு கிடைக்கும் தண்ணீர் எந்த விதத்திலும் குறைத்து விடாது என்பதை அதற்கான ஆணையத்தில் தெரிவித்து இருப்பதாகவும், காவிரி நதி நீர் விவகாரத்தில் கர்நாடகவில் எந்த கட்சி அமைக்கிறதோ அதற்கேற்ப இங்குள்ள அரசு அரசியல் செய்கிறார்களோ என்ற எண்ணம் தோன்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.

வரும் பாராளுமன்ற தேரதலில் கன்னிகுமரி தொகுதியில் நான் போட்டியிடுவதாக சமுக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது  அவ்வள்வு தான் எனக்கும் தெரியும் என்றார்.

தான் எந்த அரசியலும்  செய்யவில்லை என்றும் புதுச்சேரி, தெலுங்கானா மக்களுக்கு நல்லது என்பதை மட்டும் தான்  செய்து வருகிறோம்

அதுவும் தனக்கு இருக்கும் அதிகாரத்திற்கு உட்ப்பட்டு தான் தான் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார் புதுவை மக்களுக்கு கேஸ் மானியம் 300 ரூ கொடுக்கப்படுகிறது. ஆயிரம் ரூபாய் என அனைத்தும் முறையாக கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *