ஜூனியர் என்.டி.ஆர் அரசியலுக்கு வருவதற்கு நேரம் வந்துவிட்டது – அமித்ஷா

ஆந்திரா, தெலுங்கு மட்டுமின்றி நாடு முழுவதும் பேசுபொருளாக இருக்கிறது அமித் ஷா – ஜூனியர் என்.டி.ஆர் சந்திப்பு. தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அமித் ஷாவைச் சந்தித்தார் ஜூனியர் என்.டி.ஆர். இருவரும் சுமார் 20 நிமிடங்கள் தனியாக பேசிக் கொண்டதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. 

ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் நடிப்பை வெகுவாக ரசித்து அமித்ஷா, அவரை நேரில் சந்தித்துப் பாராட்டினார் என்று பா.ஜ.க தரப்பில் சொல்லப்படுகிறது.

நடிகர் ஜூனியர் என்டிஆர்-அமித்ஷா டின்னர்! பின்னணியில் 4 முக்கிய காரணம்!  ஆபரேஷன் சவுத்தில் பாஜக ஆர்வம் | Operation South India: what are the 4  reasons behind the meeting ...

ஆனால், இந்தச் சந்திப்பின் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாகத் தெரிகிறது. தெலங்கானா மாநிலம், முனுகோட் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக ஆகஸ்ட் 21 அன்று, ஹைதராபாத்துக்கு வந்திருந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. 

அன்று இரவு, அமித் ஷாவை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சந்தித்துப் பேசினார் ஜூனியர் என்.டி.ஆர். இந்தச் சந்திப்பு குறித்து அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் மிகத் திறமையான நடிகரும், தெலுங்கு சினிமாவின் ரத்தினமும் ஜூனியர் என்.டி.ஆர் உடனான சந்திப்பு நல்லபடியாக அமைந்தது என்று பதிவிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *