அமித்ஷாவின் அடுத்த நகர்வு: தடுமாறும் பிரபலங்கள்..!

ஐதராபாத்தில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் தென் மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று அறிவித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதற்கான வேலையை தொடங்கி விட்டதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

ஐதராபாத்தில் 2 நாட்களுக்கு முன்பு பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்துக்காக வருகை தந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரை நேற்று நேரில் சந்தித்து பேசினார். இவர் நடித்து அண்மையில் வெளியான RRR திரைப்படம் இந்திய அளவில் இருக்கு ரசிகர்களை பெற்றுத் தந்தது.

Actor Jr. NTR Tells Amit Shah That He Does Not Want To Enter Politics Now.  Scheme

இந்த படத்தின் ஜூனியர் என்.டி.ஆரின் நடிப்பை கண்டு வியந்த அமித்ஷா அவரை நேரில் சந்திக்க விரும்புவதாக பாஜக தரப்பில் கூறப்பட்டாலும், அவரை கட்சியில் இணைக்க சந்தித்ததாக செய்திகள் கசிந்தன. ஆனால், ஜூனியர் என்.டி.ஆர். அரசியல் இணைய விரும்பவில்லை என்று அமித்ஷாவிடம் தெரிவித்துவிட்டாராம்.

ரஜினியுடன் கூட்டணி பற்றி முடிவெடுக்க காலம் இருக்கிறது... அவர் இன்னும்  அரசியலுக்கே வரவில்லை -அமித்ஷா | What Amit Shah says about the alliance with  Rajini - Tamil Oneindia

நடிகர் ரஜினிகாந்த் டெல்லி சென்ற கையோடு தமிழ்நாடு வந்து ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். ரஜினிகாந்த் திடீரென அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்று அறிவித்த பின்னர் தமிழருவி மணியனும் அரசியல் பேசாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் தனது கட்சியின் பெயரை காமராஜர் மக்கள் இயக்கம் என்று மாற்றிய அவர், புதிய நிர்வாகிகளை நியமித்து அரசியலில் மீண்டும் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *