அகழாய்வு பணியில் கிடைத்த அதிசயம்..!!  பணியில் தீவிரம் காட்டும் தொல்லியல் துறை..!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணிக்காக முதல் கட்டமாக மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. 

இந்த அகழாய்வு பணியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் இங்கே காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அகழாய்வு பணியில் 70க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆதிச்சநல்லூரில் சி சைட் என அழைக்கப்படும் அலெக்சாண்டர் ரியா ஏற்கனவே அகழாய்வு செய்த பகுதியில் ஒரு தங்கத்தால் செய்யப்பட்ட காதணி கண்டுபிடிக்கப்பட்ட இருந்தது. 

தமிழகத்தில் ஏழு இடங்களில் அகழாய்வு: தொல்லியல் துறை அறிவிப்பு | Excavations  at seven locations in Tamil Nadu Department of Archeology Notice |  Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News ...

இந்நிலையில் தங்கத்தால் ஆன நெற்றி பட்டயம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 117 ஆண்டுகளுக்கு பின்னர் தங்கத்தால் ஆன பொருளை கண்டுபிடிக்க பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் வெண்கல வடிகட்டி, 2 கிண்ணம் தாங்கியுடன் கூடிய அலங்கார கிண்ணம் பறவையுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரும்பாலான தொங்கட்டான், ஈட்டி மற்றும் 9 அம்புகள் என 18 இரும்பு பொருட்கள் அகழாய்வுப் பணிகளின் போது கண்டுபிடிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *