ராணுவத்திற்கு செலவு செய்வதில் 3 வது இடத்தில் இந்தியா உள்ளது – அஜய் பட்

சர்வதேச அளவில் ராணுவத்திற்கு செலவு செய்யும் நாடுகளில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது என மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் கூறியுள்ளார் 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டுத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மக்களவையில் கேட்கப்பட்ட  கேள்விக்கு மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் எழுத்துபூர்வமாக அளித்துள்ளார்.

இதில், மற்ற நாடுகளின் ராணுவ செலவு விவரங்களை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சேகரிக்கவில்லை. எனினும் ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் இணையதளத்தில் வெளியிடப்படும் புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2021ஆம் ஆண்டில் உலக நாடுகளின் ராணுவ செலவினங்கள் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 3-வது இடம்  | India ranks 3rd in the list of countries that spend the most on military  - hindutamil.in

அதன்படி அமெரிக்காவின் ராணுவ செலவு ரூ. 63.4 லட்சம் கோடியாகும், சீனாவின் ராணுவ செலவு ரூ.23.23 லட்சம் கோடியாகும். இந்தியாவின் ராணுவ செலவு ரூ.6.06 லட்சம் கோடியாக உள்ளது என குறிப்பிட்டார். 

கடந்த 2017-21 ஆம் ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து 33.97% முதல் 41.60% அளவுக்கு ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய பாதுகாப்பு படைகளுக்கு தேவையான ஆயுதங்கள், தளவாடங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன என தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *