தமிழகத்தில் புதிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்த தல தோனி

ஒசூரில் தனியார் பள்ளியில் புதிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்த இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனி.

ஓசூர் தனியார் பள்ளியில் நடைபெற்ற கிரிக்கெட் மைதான திறப்பு விழாவில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி புதிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார்.

ஓசூர் கசவகட்டா பகுதியில் உள்ள எம்.எஸ் தோனி குளோபல் பள்ளி என்ற தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி, பள்ளியில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட புதிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சி பிரிவான சூப்பர் கிங்ஸ் அகாடமி உடன் இந்த பள்ளி தனது அதிகாரப்பூர்வ இணைப்பை அறிவித்துள்ளது. பள்ளி நேரத்துக்கு பின் அனைத்து மாணவர்களுக்கும் கிரிக்கெட்டில் தொழில் முறை பயிற்சி அளிக்கும் வகையில் பள்ளி நிர்வாகம் சூப்பர் கிங்ஸ் அகாடமி உடன் இணைந்துள்ளது. இந்த இணைப்பு நிகழ்ச்சியையும் எம்.எஸ்.தோனி துவங்கி வைத்தார்.

இது தவிர கால்பந்து மைதானத்தில் டிஜிட்டல் முறையில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் அறிவுள்ளவர்களாகவும் மாற்றும் வகையில் சுமார் 1800 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் தோனி தொடங்கி வைத்தார். தோனி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *