ஃபோர்டு நிறுவனம் எடுத்த விபரீத முடிவு: பணியாளர்கள் நிலை என்ன..?

ஃபோர்டு மோட்டார், ஏறக்குறைய 3,000 பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வது உறுதிப்படுத்தியுள்ளது. இந்த பணி நீக்கம் முதன்மையாக அமெரிக்கா, கனடா மற்றும் இந்தியாவில் உள்ள ஊழியர்களை பாதிக்கின்றன. 

வேலை நீக்கம் செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருவதாக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். செயல் தலைவர் பில் போர்டு மற்றும் தலைமை நிர்வாகி ஜிம் பார்லி ஆகியோர் கையெழுத்திட்ட மின்னஞ்சலில், ஃபோர்டு தனது வாகனங்களுக்கான மேம்பட்ட மென்பொருளை உருவாக்குவது போன்ற அதன் செயல்பாடுகளும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதால், அது செயல்படும் முறையை மாற்றுகிறது. 

Chennai Ford Maraimalai Nagar Employees On Protest Againt The Company Near  Chennai | Ford : வாக்கு கொடுத்த ஃபோர்டு நிறுவனம்..! தற்காலிகமாக  போராட்டத்தைக் கைவிட்ட தொழிலாளர்கள்..!

ஃபோர்டில் அதிகமான பணியாளர்கள் இருப்பதாகவும், தற்போதுள்ள பணியாளர்களிடம் மின்சார, மென்பொருள் நிறைந்த வாகனங்களின் போர்ட்ஃபோலியோவில் மாறுவதற்கு தேவையான நிபுணத்துவம் இல்லை என்றும் சமீபத்தில் பார்லி கூறினார். 

மின்சார வாகனங்கள் மற்றும் அவற்றை இயக்கும் பேட்டரிகள் மீது கார் நிறுவனத்தின் கவனத்தை கூர்மை படுத்துவதற்கான மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக வெள்ளை காலர் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக ஜூலையில் பல ஊடகங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *