அம்பேத்கரை திரைப்படத்தில் வைப்பதற்கே பிரச்சனை; இயக்குனர் பா.ரஞ்சித் காட்டம்

மேற்கு மாவட்டத்தில் அம்பேத்கர் சிலை பெரும்பாலும் இல்லை என்பது வருத்தமளிப்பதாகவும்,வன்கொடுமை சட்டத்தில் கைதானவர்கள் எளிதில் வெளியே வருகிறார்கள் என்றும் இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் “பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அறிவோம்” என்ற தலைப்பில் இளைர்களுக்கான கருத்தரங்கம் கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில்  நடைபெற்றது. இக்கருத்தரங்கில்  பேசிய அவர், கோகுல் ராஜ் வழக்கில் குற்றவாளிகளுக்கு  தண்டனை கிடைத்தது என்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் ஆனால் கோகுல் ராஜ் வழக்கில் முதல் தகவல் அறிக்கையே முதலில் தவறாக பதியப்பட்டதகாவும் அவர் தெரிவித்தார். 

குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்,வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எளிதாக வெளியில் வருவதாகவும் தெரிவித்தார். மேலும் வடமாவட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடக்கூடிய தலைவர்கள் அதிகம் இருப்பதாக தெரிவித்த அவர், மேற்கு மாவட்டத்தில் அம்பேத்கர் சிலை கூட பெரும்பாலும் இல்லை என்பது வருத்தமளிப்பதாகவும்,

அட்டகத்தி படத்தில் கூட அம்பேத்கர் படத்தை வைப்பதற்க்கு தயாரிப்பாளர் வேண்டாம் பிரச்சனை வந்துவிடும் என்று சொல்லிவிட்டார். ஆனால் அம்பேத்கர் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.அவரை அனைவரிடத்திலும் கொண்டு செல்ல வேண்டும். அவர் ஒரு சமூகத்திற்க்கு மட்டும் பணி செய்யவில்லை அவர் அனைவருக்கும் பணி செய்ததாகவும் அவர் தெரிவித்தார். 

மேலும்  அம்பேத்கரை முன்னிலை படுத்துவதே ஒரு குறிப்பிட்ட சாதிய அரசியலாக எடுத்து கொள்கிறார்கள் எனத்தெரிவித்த அவர், தலித்துகள் ஒரு கிராமத்தில் ஒடுக்கப்பட்டவர்களாகவே பார்க்கிறார்கள். என்றும் என்னை திசைமாற்றியதே அம்பேத்கர் தான் எனத்தெரிவித்த அவர், அம்பேத்கரை இன்னும் பலரும் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றும், சாதி இந்துகளுக்காக தான் பல விஷயங்களை அம்பேத்கர் பேசியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.  

குறிப்பாக அம்பேத்கர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை நாம் படித்து அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். என்றும்  இத்தனை ஆண்டுகளாகவே சாதியை பற்றி நாம் பேசி கொண்டு வருவதாகத்தெரிவித்த அவர், எனது திரைபடத்தில் தலித்துகளை இழிவாக காட்ட  மாட்டேன் என்றும் என்னை மோளம் அடிக்கிறவன் என்று நீ இழிவாக  சொன்னால், நான் அதை கலையாக பார்க்கிறேன். நான் ஒரு அம்பேத்கரிஸ்ட். 

இது எனது அடையாளம். இதை சொல்வதில் எனக்கு எந்த சிக்கலுமில்லை. என்றும் தெரிவித்தார். மேலும் பெரியாரை நாங்கள் எந்தவிதத்திலும் எதிரியாக பார்க்கவில்லை என தெரிவித்த பா.ரஞ்சித், நீங்கள் எப்படி கம்யூனிஸ்ட் ஒரு தத்துவமாக பார்க்கிறீர்களோ. அதேபோல தான்,அம்பேத்கரை நான் ஒரு தத்துவமாக பார்க்கிறேன். என்றும் பெரியாரிஸ்ட் என்று பலரும் சொல்லும் போது, நாம் ஏன் அம்பேத்கரிஸ்ட் சொல்ல கூடாது. 

சாதிக்கு எதிராக தொடர்ந்து போராடுபவர்கள் தலித்துகள் தான் எனவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக சிலர் ரஞ்சித், தனி பாதையில் சென்று ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கிறார் என்று சொல்கிறார்கள். ஆம் பொதுஅமைப்புகளில் எங்களுக்கான பங்கு கிடைக்கும் வரை நாங்கள் அப்படி தான் அடையாளத்தோடு  செல்வோம் என்றும் தெரிவித்தார். 

இப்படி தான் ஒரு இயக்குனர் ( மாரி செல்வராஜ்) படம் எடுத்ததற்க்கு அவர் பட்ட வலியை வேறு விதத்தில்  சொல்லியிருக்கலாம் என்று  சிலர் பேசிவருகிறார்கள். அவர் பட்ட வலியை அவர் வழியில் தான் சொல்ல முடியும்.. வேறு எந்த விதத்தில் சொல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்தார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *