நட்சத்திரம் நகர்கிறது படத்தை பாராட்டிய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம்..!!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் அன்று முதல் இன்று வரை ஒரு நல்ல படம் என்றால் அந்த படக்குழுவை வெகுவாக பாராட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படம் குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் நடித்த நட்சத்திரம் நகர்கிறது படம் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியானது. 

இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. ஒரு சிலர் இந்தப் படத்துக்கு பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினிகாந்த் இந்தப் படத்தைப் பாராட்டியுள்ளார். இதனை இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில்  நட்சத்திரம் நகர்கிறது படம் பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் இயக்கம், எழுத்து, நடிகர்களின் நடிப்பு, கலை, ஒளிப்பதிவு, இசை என அனைத்தையும் பாராட்டினார். உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கிறேன். நன்றி சார் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *