மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் டி. ராஜேந்திரன்!

இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தரனுக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டபோது அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்ததாகவும் அங்கு பரிசோதனை செய்ததில் வயிற்றில் சிறிய ரத்தக்கசிவு ஏற்பட்டு இருப்பாதக மருத்துவர்கள் கூறினர்.

இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக அவரை வெளிநாடு அழைத்துச் செல்வதாக அவருடைய மகன் சிலம்பரசம் அறிக்கை வாயிலாக அண்மையில் தெரிவித்தார்.

குறிப்பாக அவர் சுயநினைவுடன் நலமாக இருப்பதாகவும் விரைவில் சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்து அனைவரையும் நேரில் சந்திப்பார் என்றும் தனது தந்தைக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என கூறினார். இதனால் அவருக்கு விசா எடுக்கும் பணியில் அவரது குடும்பத்தினர் தீவிரமாக ஈடுப்பட்டு இருப்பதாவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனிடையே இன்று இரவு அவர் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் அவரை சந்தித்து நலம் விசாரித்தார் உலக நாயகன் கமல்ஹாசன். அதே போல் அவர் நலமுடன் திரும்பி வாரும் சகோதரரே ந்ன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *